குற்றமற்றவர் அவள்

குற்றமற்றவள் அவள்.

கனம் கோட்டார் அவர்களே நீதிபதி அவர்களே அதோ அந்தக் கூண்டில் நிற்கிறாளே ஒரு பெண் கவலை பூசிய முகத்துடன், அவள் யாருமல்ல, அவள் எனது தாய். அவள் ஒரு குற்றமும் செய்யாதவள். ஆனால் பணமும்
அதிகாரமும் உள்ள ஒரு சிலரால் குற்றம் சுமர்த்தி இங்கு நிறுத்தப்பட்டு உள்ளாள்.

கனம் நீதிபதி அவர்களே!
அவள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் யாவும் அபத்தம் என்று என்னால் நிருபிக்க முடியும். அதற்கு நீங்கள் அனுமதி தரவேண்டும்.

அனுமதி வழங்கப்பட்டது.

குற்றம் 1
தன் பிள்ளைகளுக்கு பற்பசை, பிரஷ் வேண்டிக் கொடுக்காதது.
அதற்குப் பதிலாக தேங்காய் மட்டை கரியும், வேப்பங் குச்சியும்
கொடுத்து பல் விளக்கச்
சொன்னது.

இது ஒரு குற்றம் என்றால் பற்பசைக்குள் இருக்கும்
மூல வேதியப் பொருள் என்ன? ஆங்கிலத்தில் Alkali என்றும் தமிழில் காரம் என்றும் கூறப்படும்
பொருளே. அதன் காரணம், காலை வேளையில் அதாவது தூங்கி எழுந்த பின் வாயில் உள்ள அமிலத்தை (acid) சமன் படுத்தவே. வேறு ஒரு காரணமும் இல்லை.
தேங்காய் மட்டை கரியில்
இருப்பதும் alkali தான். அப்படி
ஆனால் என் அம்மா என்ன தான்
குற்றம் செய்தாள்.?
மேலும் அந்தப் பொல்லாத வேப்பங் குச்சியைப் பார்ப்
போம். அதுவே இப்போது பற்பசை வரும் பெட்டிகளை
அலங்கரிக்கும் படங்கள்.
இதை நீங்களும் கவனித்து
இருப்பீர்கள். இது இப்படி
இருக்க என் அம்மா என்ன
குற்றம் செய்தாள்.

குற்றம் 2
கரியாலும் வேப்பம் குச்சியாலும்
பல் விளக்கி வந்த பிள்ளை
களிடம் Nescafé அல்லது Milo என்று விலை உயர்ந்த பதார்த்தங்கள் கொடுக்காது வெறும் தண்ணீரையே அருந்த கொடுத்தது.

இது ஒரு குற்றம் என்றால் அதைவிட
அறிவற்ற செயல் வேறு ஒன்றும் இருக்க முடியாது. அது எப்படி? காலையில் எழுந்தவுடன் உடலோடு சேர்ந்து உடலில் உள்ளே
இருக்கும் உறுப்புக்களின் செயற் பாடுகளும் உடன் எழுந்திருப்பதில்லை. இதை இன்னும் விளக்கமாக சொல்லப் போனால் வயிறு, குடல்,
Kidney எல்லா வற்றின்
செயற்பாடுகளையும் எழுப்பிவிட முகத்தில் தண்ணீர் தெளித்து தூக்கம் கலைப்பது போல் தான் இதுவும்.

இத்தனையையும்
பத்தாம் வகுப்பு மட்டும் அதுவும் தமிழில் படித்த என் அம்மா சரியாகப் புரிந்து வைத்து உள்ளாளே என்றால் என் அம்மா மட்டும் அல்ல அவளோடு சேர்த்து அம்மா போன்ற படிக்காத மற்ற அம்மாக்கள் எல்லோரும் பாரட்டப் பட வேண்டியவர்களே கனம் நீதிபதி அவர்களே.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (18-Apr-23, 10:34 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 61

மேலே