மழை மேகங்கள்
மழை மேகங்கள்
தன்னை
மூடிய கருமேகத்தின்
மீது
சினம் கொண்டு
மின்னலாய்
கோபத்தை
காட்டுகிறது
வானம்..!
இடியாய் தன்
குரலை
உயர்த்தி
எச்சரிக்கிறது
இந்த மேக கூட்டத்தை
பயந்து போன
மேகங்கள்
கண்ணீர் விட்டு
அழுது
தவறுக்கு
மன்னிப்பு
கேட்டு விட்டு
அங்கிருந்து
பறந்துதான்
போய்விட்டது