மழையே மழையே வா
வெயில் வெயிலென்று
கோடை வெயிலில் வாடி வதங்கி
சூரிய பகவானை
மக்கள் திட்டிக் கொண்டிருக்க
வருண பகவானோ
வேகமாக இடியோசையுடன்
அபயம் தருகிறேன் என்று
ஆறுதல் சொல்லி
விண்ணில் கடந்து சென்றான்
மண்ணில் மழை வருமென்று
மக்கள் மகிழ்ச்சியோடு
மழையே மழையே
வா.. வாவென்று வரவேற்க
காத்து நிற்கின்றார்கள்..!!
விடுமுறையில் வீட்டில்
விளையாடிக் கொண்டிருக்கும்
சிறு குழந்தைகளோ
Rain Rain go away
Come again another day
Nursery rhyme
பாடி மகிழ்ந்தார்கள்...!!
--கோவை சுபா