அன்பு தந்தையே
அன்புத் தந்தையே !!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
அன்புத் தந்தையே
அறிவின் தீபமே /
தீபமே இருளினைத்
துறத்திடும் தூயனே/
தூயனே யாவையும்
தந்தயென் நாதனே/
நாதனே எனக்குமே
நல்வழி காட்டினாய் /
காட்டினாய்ப் பூமியில்
கற்றிடும் திறமையை /
திறமையை வளர்த்திட
திசையெலாம் வெற்றியே /
வெற்றியே கண்டிட
வேண்டுமே முயற்சியே/
முயற்சியே வாழ்ந்திட
முதல்படி ஆகுமே /
ஆகுமே நன்மைகள்
அயர்விலா உழைப்பினால்/
உழைப்பினால் உயரலாம்
உலகெலாம் பறக்கலாம் /
பறக்கலாம் பறவையாய்
புசிக்கலாம் அனைத்துமே /
அனைத்துமே உன்கொடை
அன்புத் தந்தையே!!
-யாதுமறியான்.