தழைத்தோங்கு

தழைத்தோங்கு


இகழ்வோரையும் புகழ்ந்திடு
இழிவாய் நினையாதே
இறைவன் இருக்கிறான்
இதமாய் அறிவுருத்த....

நீச்சமென்று ஒன்றில்லை
நினைவில் நிறுத்திடு
நிகழ்வில் வாழ்ந்திடு
நீயும் மனிதனே....

உழைத்து முன்னேறு
உழைப்பவர்க்கு உதவிசெய்
உற்றவன் தானேவருவான்
உறவென்று உரைக்க...

பாசம் பகல்வேசமன்று
பண்பினால் பற்றுயரும்...
பலவந்தமாய் வேசமிடுபவன்
பலகாலம் பற்றுதலாகாது...

உழுதநிலம் பாழாகாது
உதவிசெய்யும் பசியாற
உழைப்பின் முன்னேற்றம்
உழைப்பவருகே உரித்தாகும்...

ஈரேழுஜென்ம மாயினும்
ஈன்றெடுத்தவள் மீதானை
ஈனம்தனை ஒதுக்கியே
ஈட்டெடுப்போம் பெருமையை...

கற்றவன் கற்பிப்பான்,
கலைகள் செழிக்க
காணும் இடமெல்லாம்
கலைக்கூடம் மின்னும்....

மாசற்ற மாமனிதனே
மனிதம் தழைத்தோங்க
மிருகமாய் உழைப்போம்
மீண்டும் செழித்தெழுவோம்....

யாக்கையிடம் நவின்றிடு,
யாதொறு விரையமில்லா
யாவரும் செழிக்க
யாக்கையே உதவிடென்று...

எழுதியவர் : கவிபாரதீ (26-Apr-23, 4:07 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 69

மேலே