நாளைய தினம்
நாளைய தினம்
இளங் காலைப் பொழுதில்
இனிதாய் விடியுமென் நாளை
மனம் கவர்ந்த மங்கையவள்
மலர்ந்த முகத்துடன் காத்திருப்பாள்...
நெடு நாளைய ஏக்கம்
அவள் மீதான கிறக்கம்
நிகழ்வு அறியா மயக்கம்
நிழலாய் தொடரும் தயக்கம்...
கண்ட கனம் உடைக்கும்
காதல், மடைப் போல்
கரையை என் இதயத்தின்
கனியும் மனம் இனிதாய்...
காத்திருந்த பொற்பொழுது
கண்முன் நின்று சிரிக்கும்,
அவள் திருவாய் மலர்ந்தருளும்
"சம்மதம்" கேட்டுமனம் இனிக்கும்...
நாளைய தினம் நானுமவளும்,
"நாங்க" ளென்று இணைவோம்
காத்திருந்த நாட்கள் கடந்து
காலம் எல்லாம் கைபிடிப்போம்...
விடியும் நாளைய தினம்
வாழ்க்கை புதிதாக மலரும்
வசந்தம் வந்து குடியேறும்
மனதின் காதல் ஈடேறும்....