செங்கொடி மறுபக்கம்..//

வானில் அழகாக
பறந்து கொண்டிருக்கும்..//

பார்த்தோர் மனதை
கட்டி இழுக்கும்..//

கொடியின் மறுபக்கம்
மிகக் கொடுமையே..//

முன்னின்று பெயர்
மட்டுமே நிலைத்தது..//

ரத்தம் சிந்திய
மக்கள் கோடி..//

உழைப்பின் அத்தியாயமாக
கிடைத்தது வெற்றி..//

சுதந்திரம் கிடைத்து
சுகந்தமாய் பறக்கிறது..//

வியர்வை சிந்தியவர்கள்
நிரந்தரமாக மண்ணில்..//

செங்கொடி காணாத
காயமோ இப்போது..//

இன்னும் இன்னும்
நினைவூட்டும் வரலாறு..//

உலகிற்கு உழைத்ததை
மறந்து விடுவோமா..//

செங்கொடியின் மறுபக்கம் ரத்தவெள்ளமாக இப்போதும்..//

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (30-Apr-23, 9:14 pm)
பார்வை : 25

மேலே