அவள் ஒரு முடிவில்லா பயணம் -9

கொள்ளாமல் குழந்தையை எடுத்துக்கொண்டு நம் அம்மா அப்பாவிடம் கொடுத்து விடலாமா என நினைத்துக் கொண்டு விஷம் குடித்த கையோடு வீட்டை விட்டு வெளியே வருகிறாள் வெளியே வந்தால் அவளால் முடியவில்லை பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விடுகிறாள் வந்து அம்மா அப்பாவை போய் பார்க்கலாமா என நினைத்தால் அவள் குடித்த விஷம் வேலை செய்ய ஆரம்பிக்கிறது இவள் வருவாள் வருவாள் என வேலைக்கு போவதையே விட்டுவிட்டு இவளையே தேட ஆரம்பித்து பஸ் ஸ்டாண்டிலேயே இருக்கிறான் இப்படி இருக்கும் சமயத்தில் இவள் விஷம் குடித்துவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு வருகிறாள். கதிர் எப்பொழுதும் போல அவளைப் பார்க்கும் இடத்திலேயே இருக்கிறான் இவள் குழந்தையை மெல்ல தூக்கிக் கொண்டு வருகிறாள் வரும்போது மயக்கம் வந்து அதாவது விஷம் வேலை செய்வதால் கீழே விழுந்து விடுகிறாள் எல்லோரும் அங்கு கூட்டமாக கூடி என்ன ஆச்சு என்று சத்தம் போடுகின்றன தூரத்தில் நின்று கொண்டிருக்கும் இவன் ஓடிவரும் மக்களை பார்த்து என்ன அங்க பிரச்சனை என கேட்கிறான் யாரோ ஒரு பொண்ணு மயக்கம் போட்டு கீழ விழுந்துருச்சு தம்பி அதான் நாங்க போய் பார்க்கிறோம் என சொல்லவும் உடனே அவனுக்கு கார்த்திகாவின் நினைவு வந்து விட்டது ஒரு வேலை கார்த்திகாவாக இருக்கலாமா என வந்து பார்க்கிறான் பார்த்தால் அது கார்த்திகாவே தான் அவளும் அவள் குழந்தையும் கார்த்திகா கார்த்திகா என்ன ஆட்சி கார்த்திகா உன்ன தான் கார்த்திகா பார்க்கணும்னு இந்த பஸ் ஸ்டாண்டிலேயே காத்துட்டு இருக்கேன் நீ வருவாய் என கார்த்திகா என்ன கார்த்திகா வா கார்த்திகா எழுந்திரு என கதிர் கத்துகிறான் அவளால் முடியவில்லை எனக்கு ஒன்னும் ஆகல கதிர் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என சொல்கிறாள் சரி எதுவாக இருந்தாலும் சரி பேசலாம் கார்த்திகா என சொல்கிறான் என்னை மன்னித்து விடு கதிர் உனக்கு செஞ்ச துரோகம் தான் என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு ரவி என்னை சந்தேகப்படுகிறார் ரொம்ப தப்பு தப்பா என்னை நடத்துகிறார் நான் தப்பானவள் என அவர் முடிவு பண்ணி கல்யாணம் நடந்த பிறகு நானும் அவரும் நிம்மதியாக இருக்கவில்லை ரொம்ப கொடுமை பண்ணி ரொம்ப கேவலப்படுத்திட்டார் நீ வாங்கி கொடுத்த வேலைக்கு கூட என்னால போக முடியல கதிர் அங்கேயும் வந்து என்னை தப்பு தப்பா பேசிட்டு இருக்கர் இதுக்கு மேல உயிரோடு இருக்கவேண்டுமா என முடிவு பண்ணி அதனால் விஷம் குடிச்சிட்டேன் கதிர் என சொல்லி அழுகிறாள் அதுக்கு போய் நீ விஷம் குடிப்பியா அவன் சரியில்லைன்னா போய் தொலைகிறன் என நீ விட்டுட்டு நீயும் குழந்தையும் நிம்மதியா வாழலாம் தானே உன் அப்பா அம்மா வீட்ல போயி என் அப்பா பண்ண தப்பு தானே இவ்வளவு பெரிய தப்பு அங்க போனா மட்டும் அப்பாவுக்கு பொண்ணு வாழாவெட்டியா வந்துட்டா நம்ம கல்யாணம் பண்ணி கொடுத்தும் அவள் வாழ முடியவில்லையே என்று கவலைப்படுவாரு இல்லன்னா மாப்பிள்ளையை பொறுத்துக் கொண்டு வாழ வேண்டும் என எனக்கே புத்திமதி சொல்வார் எனக்கும் கொஞ்சம் சுயமரியாதை இருக்குதான் கதிர் நான் சத்தியமா சொல்றேன் அவருக்கு ஒரு துரோகம் கூட பண்ணல அவருக்கு நான் எவ்வளவு உண்மையா அவரை நேசித்தேன் தெரியுமா அது அவருக்கு புரியல தெரியல அவர் சந்தேக புத்தியாலையே இன்னைக்கே அவர் குடிகாரர் ஆகவும் நான் விஷத்தை குடிச்சிட்டு இந்த உலகத்தை விட்டு போறதாகவும் ஆயிடுச்சு என்ன ஒரு கவலை தெரியுமா குழந்தை பற்றி தான் ஆனா ஒன்னு சத்தியமா அவர்கிட்ட நான் கொடுக்க மாட்டேன் அவர் கிட்ட கொடுத்தா என் குழந்தை நல்லாவே இருக்க மாட்ட எனக்கு ஒரு உதவி பண்றியா கதிர் சொல்லு கார்த்திகா கண்டிப்பா உனக்கு என்னன்னாலும் செய்வேன் அப்போ இந்த குழந்தை என் குழந்தை அவளை நீ வளக்குறியா எனக்கு கோசம் என கார்த்திகா கேட்க கதிர் நான் பார்த்துக்கிறேன் கார்த்திகா நீ கவலைப்படாதே நான் நல்லா வளர்க்கிறேன் ஆனா இப்போ வா நம்ம ஹாஸ்பிடல் போலாம் உன்ன காப்பாத்துறேன் கார்த்திகா தயவு செஞ்சு வா என கதிர் கெஞ்சுகிறான் அதற்கு கார்த்திகா வேண்டாம் கதிர் அந்த டைம் எல்லாம் முடிந்து விட்டது இதற்கு மேல் என்னை உன்னால் காப்பாற்ற முடியாது என கார்த்திகா சொல்கிறாய் இல்ல கார்த்திகா வா கார்த்திகா என கதறுகிறான் திரும்பவும் நான் ஒன்னு கேக்குறேன் கதிர் என் குழந்தையை தயவு செஞ்சு அவர்கிட்ட கொடுக்கதே கதிர் எனக்கு நீ சத்தியம் பண்ணு என கேட்கிறாள் சத்தியமா நான் தரமாட்டேன் என சொல்கிறான் சொல்கிறான் சொல்லிவிட்டு வா என கூப்பிடுகிறான் ஹாஸ்பிடல் போலாம் என கூப்பிடுகிறான் நான் வரவில்லை என ஒரு சிறிய கடிதத்தை கதிரிடம் கொடுக்கிறாள் என் குழந்தையை நல்லா பாத்துக்கோ கதிர் என சொல்லிவிட்டு அப்படியே உயிரை விட்டு விடுகிறாள் அவன் மடியிலே அதை பார்த்த கதிர் கண்ணாடி போல் சல்லி சலியாக அவன் மனம் உடைந்து விடுகிறது அவன் அழுவதை பார்த்துவிட்டு அங்கு இருக்கும் எல்லோகும் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது ஏன் கார்த்திகா இப்படி பண்ண என்ன கார்த்திகா உனக்கு பிரச்சனை ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருந்தா உன்னை எப்பயோ நான் காப்பாற்றி இருப்பேன் தானே இப்படி பண்ணிட்டியே கார்த்திகா என அவன் அழுகிறான் கையில் இருக்கும் குழந்தை அழுவதை பார்த்து எல்லோர் மனதிலும் கண்ணீர் வந்து விடுகிறது அந்த குழந்தைகளுக்கு எந்த பக்குவமும் இன்னும் வரவில்லை சிறு குழந்தை தாய் இல்லாமல் ஆகிவிட்டது தந்தையின் சந்தேகத்தால் என்று குழந்தைக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை என ஆகிவிட்டது கதிரிடம் கொடுத்து விட்டால் குழந்தையை கதிர் இடம் கார்த்திகா இறந்தது ஒரு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது அவனுக்கு வார்த்தையும் வரவில்லை என்ன செய்வது எனவும் தெரியவில்லை அப்படியே அவன் அந்தக் குழந்தையையும் கார்த்திகா கொடுத்த கடிதத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறான் கார்த்திகா இறந்து சடலமாக பஸ்ஸ்டாண்டிலேயே போலீஸ் வந்து அவர் சடலத்தை கைப்பற்றி விடுகின்றனர் என்ன செய்ய வேண்டுமோ என அவர்கள் எல்லாம் செய்கின்றனர் இவன் குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறான் பாரதிக்கு கொஞ்ச நாளாகவே இவர் சரியில்லை என்ன பிரச்சனை என்று தெரியவில்லை எப்படி இருந்தவர் அப்படியே மாறிவிட்டார் ஏன் என்ன ஆனது எதற்கு இந்த மாற்றம் என அவள் மனதுக்குள் பல கேள்வி வெள்ளோட்டமாக இருக்கிறது அதற்கான பதில் தெரியவில்லை குழந்தையோடு கதிர் வீட்டுக்குள்ளே வருகிறான் வருவதைப் பார்த்து பாரதி வந்ததும் கதிர் இடம் யார் குழந்தை என்ன என கேட்கிறாள் அதற்கு கதிர் அழுகிறான் ஏன் என்ன ஆச்சு எதுக்கு அழுவுறீங்க என்ன பிரச்சனை சொல்லுங்க என பாரதி கேட்கிறாள் அதற்கு கதிர் இது என இப்பொழுதுதான் பேசுகிறான் இது என் காதலி கார்த்திகாவின் குழந்தை என சொல்லவும் அது பாரதிக்கு ஒரு அதிர்ச்சியாக ஆகிறது என்ன நீங்கள் லவ் பன்னிங்களா அப்போ என் கூட பேசாம இருந்ததுக்கு காரணம் அதுதான்ன என கேட்கிறாள் அதற்கு அவன் ஆமாம் ஆனால் ஒன்று நான் உன்னை கல்யாணம் செய்து கொண்டேன் அதேபோல் என் காதலிக்கு எனக்கு முன்னாலே அவள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அதனால் தான் நான் உன்னை கல்யாணம் செய்து கொண்டேன் நாங்கள் இருவரும் சந்திப்பதில்லை பேசுவதில்லை எங்களுக்குள் எந்த தவறான தொடர்பும் இல்லை நீ சந்தேகப்படுகிறது தேவையில்லை என கதிர் சொல்கிறான் நான் சந்தேகப்படவில்லை உங்களை பற்றி எனக்கு தெரியும் ஆனா கொஞ்ச நாளா நீங்க ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கீங்க என்னன்னு மட்டும் தெரியலன்னு நான் நினைச்சேன் ஆனா இப்ப ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் என்கிட்ட பேசுறது சந்தோஷமா இருக்குன்னு நினைச்சேன் அதே ஒரு பெரிய சர்ப்ரைஸ் தான் நீங்க லவ் பாண்ணது சொன்னது சந்தோஷம் சொல்லுங்க என்ன பிரச்சனை என கேட்க கார்த்திகாவின் வாழ்வில் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்கிறான் சொல்லிவிட்டு அவள் இறந்து விட்டதையும் சொல்லி இந்த குழந்தையை நீதான் வளர்க்க வேண்டும் என இவன் கொண்டு வந்த சுமையை பாரதியிடம் இறக்குகிறான் அவளும் குழந்தையை வாங்கிக் கொள்கிறாள் வாங்கிக் கொண்டு ஏதோ ஒரு கடிதத்தை பாரதியிடம் கொடுக்கிறான் சரி நம் இருவரும் சேர்ந்து வளர்க்கலாம் என பாரதி காதலை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை காதல் செய்வது சகஜம் தான் ஆனால் இப்பொழுது இவர்கள் இவ்வளவு பெரிய விஷயம் அவர்கள் இறந்து விட்டார்களே அதுதான் எனக்கு மிகவும் வேதனையாக நம் பார்த்துக் கொண்டால் பிரச்சனை வராதா? என கேட்கிறாள் எனக்கு தெரியாது ஆனா கார்த்திகா இறக்கறதுக்கு முன்னாடி குழந்தையையும் லெட்டர் மட்டும் என்கிட்ட கொடுத்தா நான் ரெண்டையும் எடுத்துக்கிட்டு இங்க வந்துட்டேன் எனக்கோசம் ஒரு உதவி செய்யணும் பாரதி நீ எவ்வளவு நல்லவன் என்று எனக்கு தெரியும் இதுவரைக்கும் நான் உன்கிட்ட பேசல பேசலனாலும் அதுக்கு நீ காரணம் கேக்கல நான் உன் கூட சேர்ந்து வாழத்தான் ஆசைப்பட்டேன் ஆனா திரும்ப எப்போ கார்த்திகாவை சந்தித்தேனே அப்ப எனக்கு திரும்ப பழைய காதல் ஞாபகம் வரல அவ கல்யாணம் வாழ்க்கையில இப்படிப்பட்ட பிரச்சனை இருக்கிறது கேள்விப்பட்ட வாட்டி உன் கூட சேர்ந்து வாழும் நினைப்பு எங்க போனுச்சுனே தெரியல அவளுக்கு ஏன் இப்படி ஆனது என்று கேள்வி மட்டுமே என் மனசுக்குள்ள ஆனா இப்ப அவ இல்ல அவள் இந்த உலகத்தை விட்டு போயிட்டா அதை என் கண்ணு முன்னாடியே என்னால் அவள் அழுத்தத்து தாங்க முடியல என உளறுகிறான் அதை பார்த்து என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் இப்படி பேசுறீங்க என பாரதி கேட்கிறாள் அப்படியே மயங்கி கீழே உட்காருகிறான்

எழுதியவர் : தாரா (1-May-23, 5:56 am)
சேர்த்தது : Thara
பார்வை : 241

மேலே