கருத்தாக கூறுவது இதுவே

" எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு "

வள்ளுவன் தந்த குறள் .

வாழ்பவருக்கு ஒரு பாடம்.
காரியம் ஒன்றை செயலாற்ற
வீரீயமுடன் முடிக்க நினைப்பது
நாம் செய்கின்ற தவறாகும் !

முடிந்ததும் அதை சிந்திக்க
நினைப்பதும் தவறென்பது
குறளின் குரலாக உரைக்கிறது !

மாறுபட்ட வடிவில் பொருள்
மானிடர் உரைகள் எனினும்
கருத்தாக கூறுவது இதுவே !

நினைத்த நேரத்தில் முடித்திட
நினையாமல் சிந்தித்து செய்திடு !
நினைப்பதும் நடப்பதும் வேறானால்
நித்தமும் நினைத்து வருந்தாதே !

அவரவர் வாழ்வில் பலவுண்டு
அனுபவித்த நிகழ்வும் நமக்குண்டு !
வருத்தங்கள் நமக்கு சிலவுண்டு
திருத்தங்கள் முடியா நிலையுண்டு !

செயல்படுத்தி பின் வருந்துவது
இயல்பாக செய்திடும் நிலையிது !
உரைகளை வாசித்து நடந்திடு
உரைத்தால் உமக்கு பலனுண்டு !

வெற்றிகள் பெற்றிட சிந்திப்பீர்
கொண்ட கொள்கையை விடாதீர் !
வகுத்து வாழ்ந்திடு பகுத்தறிவுடன்
தன்மானம் கைவிடாது நடைபோடு !


பழனி குமார்
03.05.2023

எழுதியவர் : பழனி குமார் (3-May-23, 2:41 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 72

மேலே