பூமேடையின் புன்னகைப் பேரெழில்

நீலத்தில் உலவும் வண்ண நிலவே
----வானத்தில் தேய்ந்து நிறைந்தாலும்
கோலத்தில் குறைந்து வளைந்தாலும்
-----வான்மேடை அழகி நீதான்
நீலத்தில் நீந்திடும் கயல்ஏந்தும்
-----இவளோ என்றும் முழுநிலா
கோலத்தில் குறைவதில்லை தேய்வதில்லை
-----பூமேடையின் புன்னகைப் பேரெழில்
மாலவன் தொடைவழி வந்த
----ஊர்வசியும் இவள்முன் ஒன்றுமில்லை

குறிப்பு
மாலவன் ---திருமாலின் தொடையிலிருந்து உருவெடுத்து வந்து
வசீகர தோற்றம் பெற்றதால் அவள் ஊர்வசி
ஊர் என்ற சமிஸ்கிருத சொல்லின் பொருள் தொடை

எழுதியவர் : கவின் சாரலன் (4-May-23, 10:34 am)
பார்வை : 125

மேலே