மணல் கோட்டை
மணல் கோட்டை.
" எம் காதல் "
நம் இருவர் காதலுக்கு
சூரியனும் சந்திரனும்
சாட்சி
மலைகளும் ஆறுகளும்
சாட்சி
எத்தனை நண்பர்கள்,
எத்தனை விருந்துகள்
நாம் இருவரும் ஒன்றாக சென்றோம்,
அவர்கள் எல்லாம்
எங்கள் காதலுக்கு சாட்சி
நினைவிருக்கிறதா?
தொலைதூர விடுமுறைகள்
எத்தனையோ கடற்கரைகள்
அங்கெல்லாம் நாம்
எங்கள் எதிர்காலம் பற்றி பேசினோம்.
நினைவிருக்கிறதா?
கடற்கரைகளில் குழந்தைகள்
விட்டுச் சென்ற
மணல் கோட்டைகள்
நான் இப்போது உங்களுக்கு
அந்த மணல் கோட்டைகள்
போல் ஆகிவிட்டேனோ?
ஆக்கம்
சண்டியூர் பாலன்.