காதல் நீ 💕❤️

என்னவள் என நினைத்து

என் இதயத்தை தொலைத்து

வெளியில் சொல்லாமல் மறைத்து

மனதில் உன்னை நினைத்து

மௌனமாய் பேசி சிரித்து

பார்க்கும் இடம் எல்லாம் உன்

முகம் தெரிந்து

உன் பார்வையில் என்னை கவர்ந்து

பார்த்தேன் ஒர பார்வையில்

மறைந்து

உன் வெட்கத்தில் நான் உதிர்ந்து

என் மனதில் நீ நிறைந்து

எழுதியவர் : தாரா (10-May-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 222

மேலே