என்னவள் அழகு

வசந்தத்தின் மழைத் தூறல் முத்துமுத்தாய்
என்னவள் வாய்த் திறந்து சிரித்தாள் முத்துதிர
வானுலாவும் இந்துவிற்கு மூன்றாம் பிறை
தனி அழகென்றால் என்னவள் பிறை நுதலும்
அழகோ அழகு குங்கும பொட்டும் கூட
ஓடும் ஓடையில் துள்ளும் கயல்கள் தனிஅழகு
ஆடிவரும் ஆரணங்கு முகத்தில் கயலாம் கண்ணழகு
மலர்க் கொடி வேலிக்கு அழகு
மங்கை இவள் சிற்றிடையோ இவள் அழகிற் கழகு
காமனையும் மயக்கும் பேரழகு இவளழகு

எழுதியவர் : வான்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-May-23, 9:55 pm)
Tanglish : ennaval alagu
பார்வை : 198

மேலே