பிரிச்சு மேஞ்சுட்டாங்களாம் - குறுங்கதை
(கொள்ளுப்பாட்டி ): ஏண்டப்பா செல்லுவராசு எங் கொள்ளுப் பேரனுக்கு எதுக்குடா உலகத் தமிழர் யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு வைக்காத பேரை வைக்கறோம்னு அவ்னுக்கு 'பிரிச்சு'னு (Brij) பேரு வச்சீங்க?
@@@@@@
ஏம்மா, அதுக்கென்ன, அருமையான சாமி பேருன்னு எம் பையன் சொன்னான். உங்களுக்கு அவன் பேரைச் சரியா உச்சரிக்கத் தெரில.
@@@@@@@
எம் வாயில 'பிரிச்சு, பிரிச்சு'த்தான். அது கெடக்குது உடு. அவனை வளர்க்கத் தெரியாம வளர்த்து தறுதலைப் பையனாப் போயிட்டான். தினமும் யார்கிட்டயாவது வ்ம்பு இழுக்காம அவனால இருக்க முடியல.
பொண்ணுங்க பின்னாடியே சுத்திட்டு திரிஞ்சு மொத்த வாங்கிட்டு வர்றான்.
@@@@@@@
இன்னிக்கு என்னம்மா செஞ்சான்.
@@@@@@
ஒரு பொண்ணுகிட்ட சில்லுமிசம் பண்ணி அவ கையப் பிடிச்சு இழுத்தானாம். சனங்க எல்லாம் அவனை நல்லா மொத்தி பிரிச்சு மேஞ்சு காவல் நிலையத்தில ஒப்படச்சுட்டாங்களாம். தகப்பனும் தாத்தனும் அங்க போயி அந்தப் பிரிச்சுப் பையனைப் பிரிச்சு மேஞ்சு தோலை உரிச்சு தொங்கவிட்டு அவனை ஆறு உள்ள வச்சு நல்லா மொத்தச் சொல்லிட்டு வாங்க. அப்பத்தான் அவன் திருந்துவான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@.
இண்டியாசைல்ட்நேம்ஸ்டாட்காம்