காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 3
3. ரகுராமன்
திலோத்தமா வேலை பார்ப்பதில் அவள் தந்தைக்கு சிறிதும் விருப்பம் இல்லை. உனக்கு வேலை செய்துதான் ஆக வேண்டும் என்றால் நம் கம்பெனியில் எம் டி யாக ஜாய்ன் பண்ணு என்று கூறிப் பார்த்தார்.
இவளின் பிடிவாதம் காரணமாக வேறு வழியின்றி அனுமதித்து இருகின்றார். கல்யாணம் வரைக்கும் தானே ஒருமுறை கல்யாணம் ஆகி விட்டால் அதன்பின் வரும் மாப்பிள்ளை பார்த்துக் கொள்வார் என்று எண்ணிக் கொண்டார்.
தன் அருமை மகளுக்கு அவர் பார்த்த மாப்பிள்ளை தான் ரகுராமன். இவர்களின் ஸ்டேடஸ் க்கு குறைவில்லாத பெரிய குடும்பத்தில் பிறந்த இரண்டாவது மகன் ரகுராமன்.
சில மேல்மட்ட பார்ட்டிகளில் அவனைப் பார்த்ததில் அவனுடைய பழக்கங்கள் வழக்கங்கள் அவருக்கு மிகவும் பிடித்துப்போனது.
நல்ல வாட்டசாட்டமான பார்வைக்கு அழகும் ஆண்மையும் நிறைந்தவன் ஆக திகழ்ந்தான் ரகுராமன். மானசீகமாக தன் மகள் அருகில் அவனை நிறுத்தி பார்த்தார். மனதிற்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
ஆனாலும் அத்துடன் திருப்தி படாமல் ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் வை அணுகி ரகுராமனை பற்றி விவரமாக விசாரிக்க வேண்டினார். அவனைப் பற்றி முழு விபரங்களும் தெரியும் வரை பொருமை உடன் காத்திருந்தார்.
அதன்படி ரகுராமன் தந்தையின் பிஸ்னஸ் மட்டும் இல்லாமல் சொந்தமாக சில தொழில்களிலும் முதலீடு செய்து இருந்தான். அத்துடன் அவனிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சுக துக்கத்தையும் கேட்டு உதவி செய்தான். அதாவது அவனிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் இவன் பெயரைக் கேட்டாலே உள்ளார்ந்த அன்பு ததும்ப பேசுவதை இவரே கண்ணார கண்டார்.
இப்படிப்பட்ட பையன் தான் நமக்குப் பின்னால் நம் சாம்ராஜ்யத்தையும் கட்டி ஆளும் திறமை வாய்ந்தவன் என்று நினைத்து மன அமைதி கொண்டார்.
விவரங்கள் கைக்கு வந்த உடன் இன்னும் அதிகமாக அவனைப் பிடித்து போனது.
எல்லா விதத்திலும் பொருத்தமாக தோன்றியதும் காலம் தாழ்தாமல் உடனே அவன் பெற்றோர்களை பார்த்து பேசி முடித்தார்.
ரகுராமன் வீட்டிலோ, திலோத்தமாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் இவ்வளவு பெரிய தொழிலதிபர் தானே நேரடியாக வந்து பேசவும் சந்தோஷத்தில் ஒன்றும் பிடிபடவில்லை.
எல்லாம் முடிவான பிறகு தான் அவள் தந்தை திலோத்தமாவுக்கு ரகுராமன் உடைய ஃபோட்டோ வை காட்டினார்.
அவளுக்கும் அவனைக் கண்ட உடன் பிடித்துப்போனது. அன்பு ததும்பும் விழியால் சிரித்தபடி இருந்த அவனுடைய ஃபோட்டோ வை வாங்கி அவளே தன் புத்தகத்தில் வைத்துக் கொள்வதைக் கண்டு சிரித்துக் கொண்டே சென்று விட்டார்.
நம்ம ஹீரோயின் அவள் தாயின் அழகையும், கம்பீரத்தை யும் அத்துடன் தந்தையின் அமைதியையும் ஆளுமையையும் கொண்டு பிறந்தவள் ஆகையால் திலோத்தமாவுக்கு ரகுராமன் பொருத்தமா அல்லது ரகுராமன் க்கு திலோத்தமா பொருத்தமா என்று குழம்பும் அளவுக்கு ஜோடி பொருத்தம் அமோகமாக இருந்தது.
அந்த மாப்பிள்ளை ரகுராமன் தான் இன்று இவள் ஆஃபிஸ்க்கு வர தாமதம் ஆக்கிக் கொண்டு இருந்தான். நேரம் ஆக ஆக திலோவும் டென்ஷன் ஆகி விட்டாள்.
இவளுடைய பிரென்ட் எல்லாரும் பார்க்க விரும்பியதால் ஒரு சின்ன கெட் டுகெதர் தான் நடந்து கொண்டு இருக்கிறது.
இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் ரகுராமன் வராததால் அனைவரின் பொருமை பறக்க ஆரம்பித்தது.
தொடரும்.....
பின் குறிப்பு:-
( திங்கள் மற்றும் வியாழன் என வாரம் இருமுறை இந்த தொடர் கதை பதிவேற்றப்படும். தொடர்ந்து உங்கள் ஆதரவையும், கருத்துக்களையும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் கவிபாரதீ.)