கண்ணதாசனின் அனுபவப் பாடல்
அனுபவம் புதிது
நேரிசை ஆசிரியப்பா
பிறப்பில் வருவ யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பில் வருவ யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்
அறிவின் பின்னது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப் படுவ யாதெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்
பாசம் என்ப யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமும் யாதெனக்கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
பிள்ளைப் பெற்றல் யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்ப யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
வறுமை என்பது யாதெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னே யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
அனுபவித்தே அறிவதெனின் நீயேன் யென்றேன்
ஆண்டவன் நெருங்கி வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றானே
.......