புரியாத மனங்கள் தடுமாறும்

புரியாத மனங்கள் தடுமாறும்
************************************

துரும்பாக துளிரும் காதல்
அரும்பாக மாறி மலராக
பூத்திடும் காதலர் நெஞ்சில் !

இதழாக விரிந்து இன்பம்
இதயத்தில் பொங்கி வழியும்
இதமான சூழல் உருவாகும் !

காலை மாலை அறியாது
பகல் இரவும் தெரியாது
முழு நேரம் விடியல்தான் !

கலைகள் பரிமாறும் மொழியாக
அலைபேசி வழித் துணையாக
எல்லை மீறும் எதேச்சையாக !

இடை இடையே குறுஞ்செய்தி
மடை திறந்த வெள்ளமாகும்
அலை மோதும் எண்ணங்கள் !

உறவுகள் நட்புகள் துறக்கும்
உள்ளம் தன்னிலை மறக்கும்
உணர்வுகள் மேலும் பிறக்கும் !

பிரியாத காதல் வளர்ந்திடும்
முறியாத காதல் முற்றிவிடும்
புரியாத மனங்கள் தடுமாறும் !

சம்மதம் பெற்றால் மகிழ்ந்திடும்
சாதி சனங்கள் இணைந்திடும்
மல்லிகை மஞ்சத்தில் குவிந்திடும் !


பழனி குமார்
19.05.2023

எழுதியவர் : பழனி குமார் (19-May-23, 8:12 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 142

மேலே