ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா - நான்
சொல்வதை கேட்டிடுவாய் பாப்பா
தேடி அலைந்திடு பாப்பா - அறிவை
நாடி அடைந்திடுவாய் பாப்பா.

உன்னை சீண்ட இவ்வுலகில் - பல
தீமைகள் இருக்குதடி பாப்பா
மோதி உடைத்துவிடு பாப்பா - உன்
திறமையை நம்பிவிடு பாப்பா

வீட்டுக்குள் முடங்கியே நீயும் - ஒரு
அரக்கனிடம் அடிமையானாய் பாப்பா
கைபேசி என்ற கொடும் அரக்கன் - உன்
திறமையை சிறை பிடித்தான் பாப்பா

கைபேசி கையில் அது பாப்பா - உன்
கைவிலங்கானதடி பாப்பா
ஏவாளின் ஆப்பிளடி பாப்பா - உன்னை
ஏமாற்றி ஏய்க்குதடி பாப்பா

காலை எழுந்தவுடன் ஸ்டேட்டஸ் - பின்பு
காதல் ரசம் சொட்ட சாங்ஸ்
மாலை முழுதும் சேட்டிங் - என்று
காலத்தை வீணடிக்காதே பாப்பா

சிங்கிளாய் இருந்த நீ - சிலநாள்
பழகி கமிட்டும் ஆகிறாய்
சட்டென பிரேக்கப் என்று - காதலை
பட்டென்று முறித்தும் கொள்கிறாய்

நிழலை நம்பிடாதே பாப்பா - பல
நிஜங்கள் உள்ளதடி பாப்பா
சிறையை உடைத்துவிடு பாப்பா - உன்
சிறகை விரித்துவிடு பாப்பா

நல்லதும் இருக்குதடி பாப்பா - அதை
நல்லதுக்கு பயன்படுத்திடு பாப்பா
தீமைகள் ஆயிரமடி பாப்பா - அதை
தீ வைத்து கொழுத்திவிடு பாப்பா

உயிருள்ள உறவுகளடி பாப்பா - உன்னை
சுற்றி தினம் உலவுதடி பாப்பா
உயிரற்ற ஜடப்பொருளை - நீயும்
உண்மையென நம்பிடாதே பாப்பா.

தனிமையை உடைத்துவிடு பாப்பா - உன்
உறவுடன் கூடிவிடு பாப்பா
தனியாய் சிரித்தது போதும் - உன்
உறவுடன் சிரித்துவிடு பாப்பா

இன்பமோ துன்பமோ பாப்பா - அதை
பகிர்ந்திட வேணுமடி துணை பாப்பா
துணையின்றி போய்விடின் பாப்பா - நீ
அனாதை ஆவாயடி பாப்பா

ஆழ்ந்த துன்பமது பாப்பா - உன்னை
சூழ்ந்து தாக்கிடும் வேளையில்
ஆறுதலாய் அணைத்திட - அன்னையின்
கரங்கள் வேண்டுமடி பாப்பா

கண்களில் கண்ணீரடி பாப்பா - உன்
கண்களை மறைத்திடும் போது
கண்ணீரைத் துடைத்திடவே தாயின்
முந்தானை வேண்டுமடி பாப்பா

கண்ணைத் திறந்துவிடு பாப்பா - அந்த
விண்ணும் அடிமையாகும் பாப்பா
உன்னை நம்பிவிடு பாப்பா - இந்த
மண்ணும் அடிபணியும் பாப்பா

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (19-May-23, 8:27 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 24

மேலே