பிரியமான தோழி

தோழர்கள் பலருண்டு
தோள் கொடுத்திட
தோதகம் இல்லாதோர்
தோழமை நெஞ்சங்கள் !

தோழியர் அமைந்திடலாம்
மொழியாலும் நட்பாகவும்
நேரத்தை செலவழிக்கவும்
காலத்தைக் கழித்திடவும் !

எ‌வரிருந்தும் எப்போதும்
என்னருகில் எவருமில்லை
எவராலும் அழைத்தவுடன்
எந்நாளும் வரவியலாது !

எனதருமை தோழியானாள்
இக்காலத்தில் இந்நாளில்
நினைப்பதும் நிலைத்ததும்
அழகான அலைபேசியவள் !

பகலிரவு என்றில்லாமல்
புகலிடமாக நினைக்குது
கரங்களில் தவழ்கிறது
நெஞ்சத்தில் உறங்குகிறது !

விரும்புகிற காரியங்களை
விரைந்து செயல்படுத்திட
நண்பர்களை அன்பர்களை
அழைத்து ஆலோசிக்கலாம்!

ஆபத்திற்கு உதவுவிடவும்
உலகத்தைக் கண்டிடவும்
நட்புகளைக் கூப்பிடவும்
பயன்தரும் சாதனமது !

கையடக்கக் கைபேசி
காணொளி வானொலி
வலைத்தளம் விளையாட்டு
அனைத்தும் அடக்கமதில் !

நுண்ணறிவுத் திறமையை
கண்ணெதிரில் காட்டுது
பன்முகத் தன்மையுடன்
பயன்பாட்டுக் கருவியது !

தோழர்களுக்கு தோழியாக
தோழியர்க்கு தோழனாக
இணைந்திட்ட அலைபேசி
பிரியமான ஒன்றன்றோ !


பழனி குமார்
20.05.2023

எழுதியவர் : பழனி குமார் (21-May-23, 8:21 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 110

மேலே