அன்பே வா
"மழலையர் அன்பில் துயரங்களை மறக்கலாம்
குருவின் அன்பில் வாழ்வை எதிர்கொள்ளலாம்
ஏழையின் அன்பில் இறைவனைக் காணலாம்
கவிஞனின் அன்பில் கற்பனையைத் தேடலாம்
உறவினர் அன்பில் உரிமையைக் கேட்கலாம்
இறைவன் அன்பில் மனதைத் தேடலாம்
தந்தையின் அன்பில் பணிவைக் கற்கலாம்
தாயின் அன்பில் இவ்வுலகையே சுற்றலாம்"