இவ்வுலகத்தில் இருப்பவர்கள்

"அறிவாளியானவன் இவ்வுலகம் என்றும் நிலையானது அல்ல என்பான்
குருவானவன் இவ்வுலகம் உன் கையில் என்பான்
ஏமாளியானவன் இவ்வுலகம் ஒரு வீண் பிதற்றல் என்பான்
கோமாளியானவன் இவ்வுலகம் ஒரு நாடக மேடை என்பான்
ஞானியானவன் இவ்வுலகம் ஒரு மாயை என்பான்
வசதி படைத்தவன் இவ்வுலகம் பற்றி எனக்குத் தெரியாது என்பான்
கையேந்துபவன் இவ்வுலகில் வாழ எனக்கு ஓர் இடம் இல்லை என்பான்
நோயாளியானவன் இவ்வுலகம் காலத்திற்கு உட்பட்டது என்பான்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (23-May-23, 7:20 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 22

மேலே