காதல் தமிழனா இவர்

நேரிசை வெண்பா

தமிழையின்ன தென்று தறுதலை கற்கா
துமிழ்ந்துயிர் வாங்கிடும் துட்டர் -- தமிழன்
தமித்தினம் கண்டவனை தள்ளத் துணிவார்
தமிழ்வளர்ப்ப ராமித் தரை


தமிழில் புதுக்காதல் புதுப்பாடல் எழுதுகிறார் சரி. அவர்கள் மற்ற சிலர் தவறாக, எழுத்துப் பிழையுடன் ஆபாசமாக எழுதுவதையாவது கண்டிக்கச் செய்ய வேண்டாமா ? ஏனோ அவரையும் வளர விடுகிறார்.
இன்றவர் ஓட்டைத் தமிழில் தினமும் பத்து இருபது என்று ஆபாசம் எழுதி வளர்வதைக் காண எப்படி சகிக்கிறார்......

எழுதியவர் : பழனி ராஜன் (25-May-23, 8:21 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே