பட்டிதொட்டி

என் பெயர் கிரிக்கெட் கிட்டி
எனக்கு ஒரு நல்ல பேரு கிட்டி

என் மனைவி பெயர் சுருட்டி
அவள் இனிப்பு வெல்லக்கட்டி

எங்கள் குழந்தை ஒரு குட்டி
ஆனாலும் அது தங்கக்கட்டி

எங்கவீட்டு சாம்பார் கெட்டி
அந்த நாயருக்கும் அது கிட்டி

எங்க வீட்டு நாய் பெயர் பட்டி
அது நேத்து போட்டுச்சு குட்டி

கூழு குடிக்க வாங்கிய சட்டி
இப்போ இதில் சுடறது ரொட்டி

எனக்கு இல்ல வேலைவெட்டி
என் உலகம் இந்த பட்டிதொட்டி

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (25-May-23, 11:42 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 180

மேலே