உறவுகள் பலவிதம்

உறவகள் பலவிதம்
************************

விண்ணும் நிலவும் உறவு
கடலும் நீரும் உறவு
இரவும் பகலும் உறவு
வானும் விண்மீனும் உறவு
உடலும் உயிரும் உறவு
குருதியும் சதையும் உறவு
மூச்சும் சுவாசமும் உறவு
ஓவியமும் தூரிகையும் உறவு
பரதமும் பாதமும் உறவு
வண்ணமும் வானவில்லும் உறவு
புத்தகமும் எழுத்தும்உறவு
மலரும் மணமும் உறவு
தேனும் சுவையும் உறவு
இடியும் ஒலியும் உறவு
மின்னலும் ஒளியும் உறவு
புயலும் காற்றும் உறவு
வாக்கும் நாக்கும் உறவு
சாதியும் மனிதனும் உறவு
கரும்பும் இனிப்பும் உறவு
மதுவும் மயக்கமும் உறவு
அறிவும் ஆற்றலும் உறவு
தமிழும் இலக்கியமும் உறவு
சிந்தையும் சிந்தனையும் உறவு
கண்ணும் கண்ணீரும் உறவு
வெற்றியும் மகிழ்ச்சியும் உறவு
கவிதையும் சொற்களும் உறவு !


பழனி குமார்
27.05.2023

எழுதியவர் : பழனி குமார் (27-May-23, 10:03 pm)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : uravukal palavitham
பார்வை : 57

மேலே