காதல் குழந்தை செய்யும் கருவிகள்

குறள் வெண்பா

திணவில் இரவில் தெருவிறங்கி தேடும்
இணைச்சுகம் காதலென்பர் இன்று
நேரிசை வெண்பா


காதல் அரும்பக் கழுதை கடவுளின்
பாதம் தொழுகிறதா பாவமென -- நாதாறி
சோதனையு டன்செய்து சூலுறும் நாறிப்பின்
வேதனையில் சேருவள் வீடுஅகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா


திணவைத் தெய்வீ கத்தின் காதல்
என்ற னத்தி யெழுதும் கும்பல்
என்று திருந்தும் திருந்தார்
பெற்றவர் திருத்தா விட்டக் குற்றமே

எழுதியவர் : பழனி ராஜன் (3-Jun-23, 6:04 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 62

மேலே