என் இருப்பு

என் தொடக்கம் :-

இப்போது எல்லாம் எங்கள் வீட்டில் 'சிட்டுக்குருவி' கூண்டு கட்டுவது இல்லை. அதைப் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. எங்கள் குழந்தை வளர்ந்தது குருவிகளையும், காக்கைகளையும், மைனாக்களையும் பார்த்து ,பழகி விளையாடுவதே என்று நினைக்கும் போது ஒரு பெரிய 'இறுக்கம்' இப்போது என் மனதை நிலை குழையச் செய்கிறது.

"ஆமாம் எங்கள் வீட்டின் முன்புறமும், பின்புறமும் 'இரண்டு ' பெரிய அலைபேசி கோபுரங்கள் அலங்கரிக்கின்றன"

எங்களை மகிழ்வித்த பறவைகளே ! - நீங்கள் உண்ண , உறங்க , உறவாடச் சென்ற இடம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். நாங்களும் அங்கே வரத் தயாராகி விட்டோம்.
ஒரு திருத்தம்- உங்கள் உறைவிடத்தில் நிலை கொள்வது எங்கள் நோக்கம் அல்ல, இந்த நிலை இல்லா வாழ்க்கையில் இருக்கும் போதே 'இறந்து கொண்டு இருப்பதை விட, உங்கள் இறைச்சல் இறைத்தன்மை வாய்ந்தது ; அந்த சுவாசத்தை ,சுகத்தை கொஞ்சம் பகிர எங்களிடம் வந்து செல்லுங்கள்.

இப்போது வயது எனக்கு 63 ஆகிறது. காலை 6.25 மணி அளவில் என் மொட்டை மாடியில் அமர்ந்து (கடவுளுக்கு நன்றி-என்னால் இரு கால்களையும் மடக்கி அமர்ந்து சுமார் 15 நிமிடங்கள் வரை சூரிய உதயத்தில் உவகை கொள்ள முடியும்) .ஒரு 'மாலை' ஹரே கிருஷ்ண மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தேன்.

ஹரே கிருஷ்ண , ஹரே கிருஷ்ண, கிருஷ்ண , கிருஷ்ண,
ஹரே , ஹரே ,

ஹரே ராம , ஹரே ராம,
ராம , ராம,
ஹரே , ஹரே .

இது போன்று 108 முறை சொன்னால்,
ஒரு மாலை பூர்த்தி ஆகும்.

எனக்கு 8 நிமிடங்கள் ஆனது. அந்த 8 நிமிடத்தில் நான் பார்த்து, கேட்டு , உணர்ந்து, நுகர்ந்து 'மனதோடு ' பேசி லயித்த தருணங்கள் என்
"இருந்தலியலை" செம்மை படுத்தியது.

என் வாழ்வியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. என் புரிதலில் ஒரு தெளிதல் ஏற்பட்டது.

ஆம். என்னால் 'எழ' முடிந்தது. (அமர்ந்த இடத்தில் இருந்து எழ முடிகிறது. என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுக்கு என்னை இட்டுச் சென்ற பிறகு அதில் இருந்து ஒரு விடுதலையை அது தருகிறது.

நான் கேட்டவை : -

1. அணிலின் கீச்சிடும் "இறைஞ்சல்கள்",

2. சிறு சிறு பறவைகள் என் வீட்டின் பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் காலைப் பொழுதை வரவேற்று தன்னை தயார் படுத்திக் கொண்டு இருக்கின்றன.

3. மயில்கள் ஓட்டு வீட்டில் அமர்ந்து , பின் உணவுக்காக தோட்டத்தில் கொள்ளை கொள்கின்றன.

4. வவ்வாள்கள் பறந்து மறைகிறது.

5. என் உடல் உயிருடன் "இருப்பதை " உணர்கிறேன்.

6. என் ஜம்புலன்களும் ஒருங்கே இணைந்து என் உயிரோடு உறவாடி என் உடலுக்கு ஒரு உன்னத அனுபவத்தை தருகிறது.

இது தான் பேரானந்தம்:

இங்கே நான் சொன்னது ஒரு தவம்.
அவர் அவர் எண்ணப்படி . மத சம்பரதாயங்களுக்கு ஏற்ப எசு பிரானின் கட்டளைகளையோ , அல்லாவின் அருள் வாக்கியங்களையோ, புத்தரின் மெய் மறந்த நிலையில் மனதை நாம் பார்வை இட வேண்டும்.

அந்த பார்வை ஒரு கணத்தில் மறைந்து , ஒரு நிகழ்வை நம்மிடத்தில் நிகழ்த்துகிறது.

அப்போது புரியும் நாம் யார் ? என்று .

ஆம் ! நான் இறைவனின் கருணையினால் , உலகில் வாழும் இன்ன பிற உயிரினங்களின் ஒத்துழைப்பால் , சக மனிதர்களின் தன்னிகரற்ற சேவையால் உண்டு, உடுத்தி, உறங்கி , உலாவிக் கொண்டு இருக்கிறேன்.

என் "இதயம்" உள்ள வரை அதை இயக்கி , என்னை ஆட்கொண்ட 'அருட் பெருஞ்ஜோதியாகிய அருட் பெருங்கடலே ' - உன் தனிப் பெருஞ் கருணையினால் எனக்கு உள்ள வாழ்கை சவால்களை எதிர் கொள்கிறேன்.

அதுவே வாழ எனக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. அந்த சக்தி இருக்கும் வரை நான் உயிர் வாழ பெற்ற கடனை திரும்ப செலுத்த முயல்கிறேன்.

அந்த முயற்சி பொறுமை, அன்பு, சேவை, என்கிற மூன்று அம்சங்கள் கொண்டு இயங்க உன் உதவி தவிர எங்கே நான் இறைஞ்சுவது.

ஆகவே இந்த வாழ்கை என்ற பயணித்தல் என்றென்றும், எப்பொழுதும், எங்கேயும் என் உடன் இருந்து என்னை வழிநடத்து.

இந்த பயணத்தில் என் மனைவி, என் மக்கள், என் பெற்றோர் , என் உறவினர்கள், நண்பர்கள் , எங்கள் ஊர் என்பதைத் தாண்டி நம் மக்கள், நம் தேசம், நம் உலகம் என்று விரிய என் இதயத்தில் என்றென்றும் உன் நினைவுகள் மற்றும் கருணையினால் என் இதயம் தூய்மை பெற்று "மீட்சி" அடையும்.

அந்த மீட்சி ஆட்கொள்ளும் வரை அன்பு என்னை ஆளட்டும்.

இறைவா உன் காலடியில்,

செல்வம் ராஜூ,
*************************************

அனுபவ யாத்திரை:

எனக்குள் ஒருவனாக இருந்து வங்கியில் 36 வருடங்கள் சேவை செய்து இப்போது ஒய்வு பெற்று 4 வருடங்கள் ஆகிறது.

மகள் கல்யாணத்திற்கு மனனவி அழகாபுத்தூர் சென்று வர கேட்டுக் கொண்டார்.

பிஃஎவ் , கிரேஸுவிட்டி, மற்றும் PL பண வசதி மூலம் வந்த தொகையில் வட்டியாக ரூ25000 வருகிறது.

தேவைகளை பூர்த்தி செய்து, விருப்பங்களுக்கு அப்பால் வாழ பழகிவிட்டோம்.

அழகாபுத்தூர் செல்ல இரு சக்கர வாகனம் வீட்டில் உண்டு. குறைந்தது 1/2 மணி நேரத்திற்குள்

கோவிலுக்கு சென்று வர முடியும்.

படிகாசு நாதர் கோயில் குடந்தையில் இருந்து 7 கி.மி தூரத்தில் அமைந்த சொர்ணபுரீசுவரை வணங்கி, பிறகு தாயார் பாதம் (அழகாம்பிகை) தொட்டு பிரார்தனை செய்து கடைசியாக முருகப்பெருமானை (சங்கு சக்கரத்துடன் காட்சி அளிப்பவர்) தரிசித்து வந்தால் வீட்டில் சுபகாரியம் நடக்கும் என்பது ஐதீகம்.

நான் என் உள் உணர்வுக்கு அடி பணிவேன். அதில் பெரும் நம்பிக்கையும் உண்டு.

காரணம் :- நான் தற்பொழுது நிகழ்கால நிஜங்களை தரிசித்துக் கொண்டு இருக்கிறேன். அதில் கிடைக்கும் அநுபவம் என்னை வழிநடத்துவதாக உணர்கிறேன்.

இந்த "உள் உணர்வு" என்னை நானே பரிசோதனை செய்து கொள்வதில் தொடங்கி, தற்சமயம்
"அந்த உணர்வே " இல்லாமல் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.
அதாவது என் நிகழ்வுகளை ஆராய்வதை விட அதை "பார்வையாளனாக " இருந்து கடந்து செல்ல விளைகிறேன்.

அந்த விதத்தில் என் செயல்கள் சற்று முன் முனைப்போடு செயல்படுவதாக உணர்கிறேன்.

மேலும் என் எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட கால அளவுகளில் முடிக்க இந்த "சுய நினைவு " (இருத்தலியல்) பெரிதும் உதவியாக இருக்கிறது என்றால் அது உண்மையே !!

அதே சமயம் எந்த ஒரு செயலும் நடக்க , நடந்து முடிய "நானே" காரணம் என்று கருதாமல் அது -சுய நினைவு; என்னை ஆட்கொண்டு ,சிறிது காலம் இயங்கி பின் என்னை விட்டுப் பிரிவதாக எண்ணுகிறேன்.

என் குருவின் வாக்கியம் இப்போது நினைவுக்கு வருகிறது.

- நீ சில சமயங்களில் பார்வையாளனாக இரு;
- கடந்து செல்;

- சில சமயங்களில் பங்கேற்பவனாக இரு;
- செயல் புரி;
அப்போது தான் உன் அகம் தூய்மை பெரும்.

அவரின் பொன்னான சிந்தனைகள்:-

-இங்கே யாவரும் யாசிக்கத் தான் பிறந்து இருக்கிறார்கள்; பிழைப்பு நடத்துகின்றனர்;
- அரசியல் வாதி வாக்குகளை யாசிக்கி றான்;
- ஆசிரியர் அறிவை யாசித்து அருளுகிறார்;
- தொழில் நடத்துவோர் நுகர்வோரை யாசிக்கின்றனர்;
- தொழிலாளி இறைவனை யாசிக்கிறான்.

காலம் என்கிற "சக்கரம் " எல்லோரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

அதுவே உண்மை !!! அதுவே எல்லாம் !!!

சுனாமிக்கு ஏழை , பணக்காரன் என்கிற பேதம் இல்லை. நில பூகம்பத்திற்கு
ஏழை , பணக்கார நாடு என்கிற வேற்றுமை இல்லை.

வளமுடன் வாழ்வோம் . அன்பு, இறக்கம், ஆதரவு ஆகிய பண்புகள் நம்மை ஆட்கொள்ள அந்த பரம் பொருளை நாடுவோம்.

'தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி'

மேலே கூறிய அநுபூதி எனக்கு Mini Bus ல் பிரக்ஞையுடன் பிரயாணப் பட்டதால் கிடைத்தது.

அனுபவ யாத்திரை :-

காலை 10 மணிக்கு தாராசுரம் வீட்டுல் இருந்து புறப்பட்டு குடந்தை பஸ் நிலையம் 10.20 அடைந்தேன்.

10.40க்கு அழகாபுத்தூர் ( Mini Bus ) புறப்பட்டது. சாக்கோட்டை தாண்டி சிவபுரம் வழியாக அழகாபுத்தூர்.

நடவே 5 அழகான கிராமங்கள்.அவர்களுக்காக இந்த வண்டி தினமும் செல்கிறது.

ஒரு புறம் அரசலாறு; மறுபுறம் வயல், வாய்க்கால், நெல், சாகுபடி என விவசாயம்.

நான் பார்பது வெறும் பார்வைகளே !!!
என் பார்வைக்கு "உயர்" கொடுக்கும் ஒவியங்கள் - பஸ், ஓட்டுநர், விவசாயம், விவசாயி ;

தீடிரெண்டு பஸ் சிவபுரம் தாண்டி நின்றது. ஊர் கூடி தேர் இழுப்பது போல, கிராமமே வந்தது. நாங்களும்தான் !

அந்த பங்கேற்பில் எல்லோருக்கும் மகிழ்ச்சி ; பஸ் இனிதே நகர்ந்தது.

பேருந்து ஒட்டுநர் தான் அந்தப் பகுதி ஹரோ ! நடத்துனரும் ஓட்டுனரும் அந்தப் பகுதி மக்களின் அன்பையும், மரியாதையும் அதிகம் சம்பாதித்து வைத்து இருக்கின்றனர்.
அழகாபுத்தூர் கோயில் பூசாரி எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் , இருப்பதைக் கொண்டு இறைவனை பூஜித்து , பக்தர்களை மகிழ்விக்கிறார்.

இங்கே எல்லா நேரமும் நல்ல நேரமாகக் கருதப் படுகிறது.

ஆம் ! இறைவன் திருவடியில் எல்லோரும் குழந்தைகளே !!!

பேதமை இல்லை ; எந்த பேதமும் இல்லவே இல்லை.

***************************************

இடை சருகல்:-

தேவகி, ஒரு சமுக செயல்பாட்டாளர்; எழுத்தாளர்; ஒவியர் என்று பல முகத்தன்மை கொண்டவர்.

அவருக்கு இப்போது வயது 80 ஆகிறது. இன்றும் அவரை சந்தித்து நேர்காணல் காண "காட்சி ஊடகங்கள் காத்து இருக்கின்றன.

அவருடைய பேச்சு இப்போது அதிகம் பகிரப் பட்டு வருகிறது.

ஒரு நிருபர் அவரிடம் பேட்டி காணும் போது :

"மேடம், நீங்கள் சமூக அக்கறை கொண்டவர்; பெண்கள் விஷயத்தில் குரள் கொடுக்கத் தவறியது இல்லை. அது அவர்களுடைய 'உடையைப்
பற்றியோ, மதரீதியான தடைகள் பற்றியோ - 'அடிப்படை நீதி'-எல்லா மனித குலத்திற்கும் பொருந்தும் என்றும் பேசிவந்து உள்ளீர்கள்".

என்னுடைய நேரடியான கேள்வி?
"பூனை நடை" என்கிற பெயரில் நடிகைகளும், அவர்களைப் பின் தொடர்ந்து பெண்கள் ( பள்ளி, கல்லூரி உட்பட) தங்களை கேளிப்பொருளாக காட்டிக் கொண்டு , முக நூலிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து வருவதை எப்படி பார்க்கிறீர்கள் ?

ஒரே வார்தை; அதுவே வாக்கியம். இது ஒரு மாயை. Like பெருவதற்காக செய்யப்படும் ஒரு "விளையாட்டு வலை," . சிறிது காலம் களித்து புளித்து விடும். மனிதனுக்கு மறதியே வரம்.

இது தனி மனித உரிமை; மேலும் இந்த செயல் பிறர் மனதை , மதத்தை, இனத்தை புண்படாத விதத்தில் இருக்கும் பட்சத்தில் இதை ஒரு 'பொழுது போக்காக' எடுத்துக் கொண்டு கடந்து செல்வதே மேல்!

ஆண் தன்னை ஆளுமையாக காட்டுக் கொள்ள பல வழிகளை நாடுகிறான். இதுவும் ஒருவகையில் பெண்கள் தங்கள் "ஆளுமையை " இந்த வழியில் வெளிக் கொணர்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டயது தான்.

இதில் பெண்மை, கற்பு என்று தொடர்பு படுத்தி பேசுவது அபத்தம். இது ஒரு மனப்போராட்டத்தின் வெளிப்பாடு; இதை ஏற்றுக் கொள்வதும்; நிராகரிப்பதும் அந்த அந்த சமூகத்தின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

இதுவே உலவியில் ரீதியான பதிலாகவும் இருக்கும்.

வேறு ஏதாவது 'விடயம்' இருந்தால் , இந்த காணொளியைப் பார்பவர்கள், 'கமெண்ட்' செய்ய கேட்டுக் கொள்கிறேன். சமூகமாக இருந்து சுமூகமாக என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்.

மேலும் கோட்பாடுகளும் , சிந்தனைகளும் நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் , அரசியலுக்கு அரசியல் வேறுபடும்.

அமெரிக்காவில் "பொருளதாரக் குற்றம்" பெரிய குற்றம். மேலும் ஒருவருடைய விருப்பத்தில் அல்லது சுகந்திரத்தில் தலையிட அரசுக்கும் உரிமை இல்லை.

ஆனால் , நம் நாட்டில் "தலை கீழ் ".

பொருளாதாரக் குற்றம் மன்னிக்கப்படுகிறது . தனிநபரின் அந்தரங்கம் பேசு பொருளாக மாறுகிறது.

வாழ்வியலும் , ஒழுக்கமும் பொருளாதாரத்தில் இருந்து மீட்கப் படவேண்டும்.

தெளிவு வரும் ; தெளிவோம் !!!.

**************************************

யாருக்காக????

"படிக்கும்போதே ஒரு குறிக்கோளுடன்படிக்க வேண்டும்.நம்முடைய இலக்கு என்ன?எதற்காக படிக்கிறோம்?இந்த சமுதாயத்தில் நம் பங்கு என்ன?-என்பதைப் பற்றிய 'புரிதல் ' நம்முடைய குழந்தைகளுக்கு அறவே இல்லை என்றே சொல்ல வேண்டும்.

"மகன் +2 வகுப்பிலும் , மகள் 10th வகுப்பிலும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் 60 வருட வாழ்க்கையை (அமைத்துக் கொடுப்பது) பற்றி அலுத்துக் கொண்டே 'என்ன நான் சொல்வது சரிதானே ? என்ற படி காலை பத்திரிகை செய்திகளை படித்துக் கொண்டே வந்த காப்பியை சிறிது தொண்டையில் மூழ்கிய படியே வினவினார் !

எல்லாம் சரி, ஆனா ஒன்றும் எனக்கு சரியாக படலே ;

என்னடி ;?

' ஆமா போங்க, நாளு நாளா நம்ப சமைய பாத்திரம் சுத்தம் செய்றவங்க வரவே இல்லை ;நானும் போன் பண்ணி பார்த்தேன். எடுக்க மாட்டேங்கிறாங்க,

நம்ப பையனை ஸ்கூல் போகும் போது பார்த்து விட்டு போகச் சொன்னேன்.எங்க கேட்கிறாங்க? -

உங்க மகளைப் பற்றி பேசவே வேண்டாம் .அப்படி வளர்கிறேள்'.
"என்ன பரத நாட்டியம், கலை , ஒவியம் என்று கற்று பயன்"பெற்ற தாய்க்கு ஒரு கஷ்டம் என்று வந்தால் பதற வேண்டாமோ?'

நீ சொல்றது நன்னா எனக்கு புரியுது; என்னை என்னச் செய்ய சொல்ற ...

'ஒண்ணும் செய்ய வேண்டாம். என் குறைய மட்டும் சொன்னேன்.அவ்வளவுதான".

முடிந்தால் வேறு ஏற்பாடு செய்யவும்; இல்லையேல் எல்லோரும் சேர்ந்து "Swiggy" ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க.-

"எனக்கு மட்டும் தான் என்னால் சமைக்க முடியும்" - அந்த நொடியில் அவள் வாழ்ந்தாள்.

அடிப்பாவி ; இப்படி சுயநலக்காரியாகி விட்டியே !!!

இது அடுக்குமா ????
எழுந்து தன் அண்ணாரைப் பார்த்தாள்.

பார்த்த பார்வை அப்படியே இருந்தது.

அவர் மீது சாய்ந்தாள்.

***************************************

A)ஆகச் சிறந்த காதல் :

அந்த வீடு, இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது; சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பிதழின் பேரில் சென்றபோது அந்த வீடு பழைமை காத்தது. பெரிய திண்ணை. பிறகு முற்றம். நல்ல பரந்த வழிநடப்புகள்.

சிறிய அறை ; பெரிய சமையல் அறை. என்ன சொல்ல !!! அந்த வீட்டைப் பார்ப்பதற்காகவா சென்றான் சாமி ?

இல்லை; இல்லவே இல்லை. அந்த அழகை ,தேவதையை அவள் குடியிருக்கும் வீட்டில் பார்ப்பதற்கு ஏதோ சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண்டு போக வேண்டிய தருணம் பார்த்து போனான் என்பது தான் உண்மை !

அந்த உரையாடல்கள், விதவை அம்மா, சகோதரன் கல்யாணம் ஆகவில்லை;கரிசனங்கள்; கவனிப்புகள் என்று எல்லாம் பிடித்து இருந்தது சாமிக்கு .

அப்போ , எதற்கு இந்த ஒப்பனை.எல்லாவற்றையும் அடுத்த நாள் சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்து காத்து இருந்தான்.

அவளே சொன்னாள் : எனக்கு முறைப்படி வரும் ஞாயிறு பெண் கேட்டு வருகிறார்கள். அதற்காக முதல் நாள் சனிக்கிழமை நாங்கள் குடும்பமாக குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டி இருப்பதால் ' விடுப்பு வேண்டும்' என்று நீட்டினாள் கடிதத்தை.

சாமி, மேலாளர் அமோதித்தார்; அனுமதித்தார்; இதயம் கேட்டது :-
"இனிமேல் அப்படி சொல்லாதே என்று யாரை கேட்பது ?"
B)ஆகச் சிறந்த அரசியல் :

நன்றாகவே தெரியும், இந்த காரியத்தை செய்தால் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்று .

எதற்கும் தன் நெருங்கிய ,ரகசிய நபர்கள் சிலருடன் இதைப் பற்றி யோசித்து , இந்த source ஐ பயன்படுத்தி இந்த lead ஐ பிடித்து ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்று மேலிடம் சொல்வதாக பகடி அடினான் தலைவன்.

"ஏன், செய்தால் என்ன ? இதில் ஒன்றும் நமக்கு இழுக்கு " இல்லை என்று ஒரு சாரரும்; 'இருந்தாலும் நாமும் அக்கா, தங்கையுடன் பிறந்து இருக்கிறோம் எதற்கு இந்த வம்பு ' என்று மற்றொரு சாரரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

எல்லாம் "காலத்தால் மறக்கப்படும், அல்லது மறைக்கப்படும்" என்கிற 'நியதி' உண்மை என்பதை உணர்ந்த தலைவன் தன் "இரண்டு" செயலாளரிடமும் இப்படிச் சொன்னான்.

உங்கள் இருவரில் ஒருவர் நம் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து அதற்கு காரணம் "நீதி கேட்டேன் ; நிதி வந்தது " என்று சொல்ல வேண்டும் என்றும் ;அதற்கு மறுநாள் 'தான்' ஒரு press meet ஏற்பாடு செய்து அதற்கு விளக்கம் அளிப்பதாகவும் சொன்னார்.
இருவரும் கைநீட்டினர்- எவ்வளவு தொகை கொடுப்பதாக இருக்கிறீர்கள் !?

அடுத்த நாள் செய்தி :

அந்த உறுப்பினர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

சிறுதுளிகள் :-
++++++++++

குளங்கள் குட்டைகள் அன்று மருதம்;

வீடுகள் விடுதிகள் இன்று ஆனது;
ஏரிகள் எல்லாம் எளிதாய் மாறிட,

மருதம் இனிமேல் பாலையாய் காண்பாய்!

காலங்கள் ; கோலங்கள்
+++++++++++++++++++

பகலில் வேடம் ; இரவில் ஆட்டம்,

இப்படிச் செய்தால் , எப்படிச் சொல்வது,

உழைத்து உண்ண கரங்கள் இருக்க;

வாயை விற்று வாழ்வது சாதலே !!!

Selvaraj raman

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மீண்டும் சந்திப்போம்!!!!!

கிரேக்கம் உலகிற்கு தந்தது விஞ்ஞானம்;

தமிழ் உலகிற்கு தந்தது மெய்ஞானம் ;

தமிழன் தன்னை குடிகளாக அறிந்தான்,

தான் வாழும் நிலங்களை திணைகளாக ஆக்கினான்;

வாழ வழிசெய்தான், வாழும் கலை அறிந்தான்,

வென்று பலகண்டங் களை கண்டான்.

தடம் பதித்தான்; தாண்டவம் ஆடவில்லை,

மனிதம் வளர்ந்தது ; புனிதம் என்பது,

பூமியில் பிறக்கும் எல்லா உயிர்க்கும்,
ஒன்றே ஆனது .ஆகவே சொன்னான் -

ஒன்றே குலம் ;ஒருவனே தேவன்.

இலக்கணம் கண்டான், இலக்கியம் வகுத்தான்,

ஆகவே சொல்கிறேன் தமிழன்
தன் பிறப்பால், மொழியால் , இனத்தால், திணையால் ;

யாதும் ஊரே !! யாவரும் கேளீர் !!!

இனியவை இயற்கையே.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

எழுதியவர் : (29-Jun-23, 7:02 am)
சேர்த்தது : செல்வன் ராஜன்
Tanglish : en irppu
பார்வை : 41

மேலே