இல்லாள் நீ இல்லால்
எதுகைளில் ஒரு ஏகாந்த கானம்
மதி அழகை மூடுதடி மேகம் - என்
மதி அழகை மூடுதடி மோகம்.
என் ரதி இங்கு இல்லாத சோகம்
எந்த நதி வந்த போதும் தீராது என் தாகம்
விதியை நான் நொந்தென்ன லாபம் - இந்த
கதி இன்று அவள் இட்ட சாபம்
பதி நெஞ்சில் எரிகின்ற தாபம் -நீ
ஜோதியாய் வந்தாள் வாழும் என் தீபம்