கேட்டேன் கிடைக்கவில்லை
கேட்டேன் கிடைக்கவில்லை
××××××××××××××××××××××××
விளைநிலமெல்லாம் கட்டிடமாவதை நிறுத்தக் கேட்டேன்
பட்டப் படிப்பை விவசாயத்தில் கேட்டேன்
விவசாயம் செய்ய இளைஞர்களை கேட்டேன்
உழுதிடும் கலப்பை மீண்டிடக் கேட்டேன்
உழுதிடும் காளைகள் இரண்டைக் கேட்டேன்
வரப்புகள் வெட்டிட மண்வெட்டி கேட்டேன்
வரகு திணை விதைகள் கேட்டேன்
விதைகள் துளிர மழைகள் கேட்டேன்
மழைநீரை சேமிக்க நீர்நிலை கேட்டேன்
பயிர் விளைந்திட இயற்கை உரத்தைக் கேட்டேன்
விளைந்த பயிரை அறுவடை செய்ய ஆட்கள் கேட்டேன்
விளைந்த பொருளை வாங்கும் நல்ல தரகனைக் கேட்டேன்
விளைபொருளுக்கு குறைந்தபட்ச லாபம் கேட்டேன்
லாபம் இல்லாததால் வாழ்ந்திடக் கடனைக் கேட்டேன்
கடனை அடைக்க தூக்கு கயிற்றைக் கேட்டேன்
இத்தனை கேட்டேன் கிடைக்கவில்லை மரனம் மரனம் கேட்டேன் ..
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்