முதல் அனுபவம்

கண்களிலே செதிலெடுத்து
காதருகே மடல் கடித்து
கற்பனையில் மலர்தொடுத்த
கனவு நினைவாகிறதே

கன்னத்திலே புள்ளியிட்டு
கழுத்தருகே கோலமிட்டு
மிச்ச புள்ளி இரண்டையுமே
மிட்டாய்க்காய் விட்டிருந்தேன்

இடையினிலே போர்தொடுக்க
ஈட்டிமுனை வேல் எடுத்து
ஆயக் கலை போர்களுமே
பற்களுக்குள் நடந்திடுதே

பத்துவிரல் சிறையாகி
பஞ்சுமெத்தை கரையாகி
பாற்கடலைக் கடைந்திடவே
பாலமுதம் கிடைத்திடுதே

வற்றாத சுனைகூட
வாட்டமாக பார்த்திடுதே
எட்டிஇள நீர் பருக
ஏக்கமாக கேட்டிடுதே

சகாராவின் பாலைவனம்
சாம்பல் நிற பறவையிடம்
சல்லடைக்குள் வீடுகட்டி
காபி ஆற்றி குடிக்கிறதே

தின்ன தின்ன குறையாத
தின்பண்ட பாத்திரமாய்
அள்ள அள்ளக் குறையாத
அட்சய பாத்திரம் நீ

வெள்ளி நிலா வீதி வர
வெகுநேரம் ஆவதேனோ
கைநிறைய தங்கவளை
தாகத்தீயை தடுப்பதனால்

கொழுசினுடை கொழுந்தியக்கள்
கொள்ளபக்கம் செல்கையிலே
சத்தங்கேட்டு சூரியனோ
நேரஞ்சென்று உதிக்கிறதோ

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (4-Jul-23, 6:58 am)
சேர்த்தது : Kannan selvaraj
பார்வை : 305

மேலே