திங்கள் தவழ்முகத்தில் புன்னகை ஏந்தி

செங்கதிர் விரிய செந்தாமரை மடல்விரித்துச் சிரிக்க
தங்கத் தகடென தாமரைப் பொழிலலை வட்டமிட
பொங்கிடும் பூம்புனல் போல பூங்குழல் கலைந்தாட
திங்கள்தவழ் திருமுகத்தில் புன்னகை ஏந்தி வந்தாய்நீ
செங்கதி ரும்பூக்க செந்தா மரையும் மடல்விரிக்க
தங்கத் தகடென பூந்தண்பொ ழில்செம்பொன் னாய்மின்னிட
பொங்கிடும் பூம்புனல் போலவே கூந்தல் கலைந்தாடிட
திங்கள் தவழ்முகத் தில்புன்ன கைஏந்தி வந்தனையே