இதுவும் கடந்துப்போகும்

கடந்து வந்த பாதையில்
சவால்கள் நிறைந்திருந்தாலும் சமாளித்து கடந்துவிட்டேன்
எதிர்வருவதோ வயோதிகப் பாதை
மரணத்தைவிட கொடுமையாக
இருக்குமோ என்ற அச்சம்
என் மனதுக்குள் வேர்விடத் தொடங்கியுள்ளது
வயோதிகம் என்பது கவலை நிறைந்த குழந்தைப் பருவம்..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-Jul-23, 9:05 am)
பார்வை : 210

மேலே