மாட்டு வண்டி
ஐந்தறிவை ஆறறிவு,
மனசாட்சியை மறந்து
குத்தூசியால் குத்தும்....
அங்கு கட்டி இழுப்பவர்
அல்லாது, அலுங்காமல் அமர்ந்தவர் ஆரவாரமாக கத்துவார்....
தோளில் கட்டி இழுப்பவர்க்கு
கண் கலங்காது - ஆனால்
சொகுசாக அமர்ந் தவர்தம்
தோள் வலிக்கும்....