நொறுக்குத் தீனி

தித்திக்கும் தீபாவளியை
திருப்தியாக கொண்டாடி
வெகு காலம் கடந்தாயிற்று....

அடடா... தீபாவளி வருவதற்கு
சில வாரங்கள் முன்பிருந்தே
வீட்டில் வரிசை கட்டும்
பார்க்க பார்க்க தெவிட்டாத
பலவகை பலகாரங்கள்....

பசுங்நெய் வாசம் காற்றில்
கலந்து நாசியை தீண்ட
பரவசமாய் இனிக்கும் நாவில்
பட்சணம்.....

தீபாவளி கடந்து மாதம்
கடந்தும் நொறுக்குத்தீனி
நம்மை கடந்து போகாது
நிறைந்து நிற்கும் வீட்டில்.....

களை கட்டும் தீபாவளியை
காணும் பேறு இன்றைய
குழந்தைகளின் மிகப்பெரும்
இழப்பு என்றால் மிகையாகாது....

பாரம்பரிய பலகாரங்கள்
நிறம் மங்கி, ஆங்கிலவழி
கல்வி மோகம் போல்
நொறுக்குத் தீனியும் முகம்
மாறுகின்றது....

பீட்ஸா பர்கர் என்று
இன்றைய குழந்தைகளின்
மனதினில் பசையாக ஒட்டும்
பல காரங்களின் மோகம்....

நம் வாரிசுகளை எங்கு
நிறுத்தும்? காத்திருந்து தான்
காண வேண்டும் விளைவுகளை....


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (16-Jul-23, 6:56 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 46

மேலே