காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 12
12. பிரளயம் ஆரம்பம்.
திலோத்தமாமாமா...... என்று கோபமாக அதட்டினார் கமிஷனர்.
திடீரென்று அவர் குரல் கேட்டு அவளை அறியாமலே அவள் உடல் நடுங்கியது.
ஏதோ அவளின் திருட்டு பிடிபட்ட பாவனையை அவளிடம் கண்டார் கமிஷனர்.
என்ன காரியம் செய்து கிட்டு இருக்க இதோட விளைவு என்ன ஆகும் என்று தெரிஞ்சு தான் செய்யறியா.....?
பயத்துடன் நின்ற திலோத்தமா..
நன்றாக நிமிர்ந்து நின்று ஆமா அங்கில் நல்லா யோசிச்சு தான் சொல்றேன் என்று மிகத் தெளிவாக கூறினாள்.
அவளின் நிமிர்வும், திடீரென அவளிடம் காணப்பட்ட தெளிவும் இது ஒன்றும் நல்லதுக்கு இல்லை என்று தெள்ளத் தெளிவாக அவருக்கு புரியவைத்தது.
அவளுக்கும் வருத்தம் தான் அவளுக்கு பிடித்தமான அங்கில் இடம் இந்த தோரணையில் பேசுவதை நினைத்து. ஆனால் வேறு வழி இல்லை இவர்களுக்கு புரியவைக்க என்று மனதில் நினைத்து தன்னை தானே தேற்றிக் கொண்டாள்.
அதற்குள் டாக்டர் பாரதி தாசன் வந்து குழந்தையை செக்கப் செய்து முடித்திருந்தார்.
குழந்தைக்கு ஒன்றும் இல்லை சார் என்றபடி கைகளை துடைத்துக் கொண்டே டாக்டர் வந்தார்.
க்ளாட் டூ மீட் யூ சார், என்று கூறியபடியே கமிஷனரிடம் வந்து கை குழுக்கினார்.
பின் ஐ ஆம் டாக்டர் பாரதி தாசன், என்று கூறி தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டே, குழந்தைக்கு ஒன்றும் இல்லை அவன் நன்றாக இருக்கிறான் என்றார்.
சரியாக சாப்பிடாமல் இருந்திருப்பான் அதான் மற்றபடி பெரிசா ஒன்றும் இல்லை.
குழந்தைக்கு ஊட்டச்சத்து உள்ள ஆதாரமாக கொடுங்க ரொம்ப வீக்கா இருக்கான் என்றார்.
இவ்வளவு சின்ன குழந்தையை நேரத்துக்கு ஆகாரம் கொடுத்து நாம தான் கவனமா பார்க்கனும், இந்த வயசு குழந்தை எப்படி இவ்வளவு வீக்கா இருக்கான்..... ஆச்சரியமாக இருக்கிறது என்று டாக்டர் கூறியதில், திலோத்தமா குழந்தையை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும், உள்ளார்ந்த கோபமும் உள்ளடக்கி இருந்தது.
சாதாரணமாக இது போல் குழந்தையை சரியாக கவனிக்காமல் இருந்தால் கோபம் தலைக்கு ஏற பிடித்து நன்றாக திட்டி விடுவான். அதை விட வேறு என்ன வேலை என்று நேராக திட்டுவான் இன்று கமிஷனர் அங்கு இருந்ததால் இத்துடன் விட்டுவிட்டான்.
குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் காட்டினால் அவருக்கு சுத்தமாக பிடிப்பதில்லை.
திலோவின் கமிஷனர் அங்கில் டாக்டர் கூறியதைக் கேட்டு உதடுகள் பிரியாது புன்னகைத்தார்.
அவர் புன்னகையின் அர்த்தம் விளங்காத பாரதி, சார் இஃப் யூ டோண்ட் மைன்ட் உங்க புன்னகைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளலாமா என்று மனதில் தோன்றியதை கேட்டு விட்டான்.
( டாக்டர் பாரதிதாசன் ஐ அவருடைய படிப்பு மற்றும் தகுதியை கருத்தில் கொண்டு "அவர்" என்று மரியாதையாக தான் அழைக்க வேண்டும் என்றாலும் வயதின் ( 30) அடிப்படையில் நாம் அவரை சாதாரணமாக அவன் என்றே இனிமேல் அழைப்போம்).
ஒரு புகழ்பெற்ற நியூரோ சர்ஜன் என்ற கர்வம் சிறிதும் இல்லாமல் சாதாரணமாக அவன் உரையாடுவது பார்த்து கமிஷனர் வினோத் குமார்க்கு அவன் மீது நல்ல அபிப்பிராயம் தோன்ற அவனை பார்த்து கூறினார்,
அவன் திலோத்தமாவின் மகன் இல்லை......
அவனுக்கு ஒன்றும் ஆச்சரியமாக இல்லை, ஒரு மாதிரி அவன் ஊகித்து இருந்த விஷயம்தான் அது.
அவன் வந்த போதே கவனித்தான், குழந்தை அவளுடையது இல்லையென்று.
அவளின் தோற்றம் கண்டு உண்டான சந்தேகம் தான் அது. பால் நிறத்தில் கை, காது, கழுத்து, என எல்லாம் பிளாட்டினம் நகைகள் மின்ன படிப்பறிவில் உச்சம் தொட்ட களையும், அதற்கு நேர்மாறாக கருகருவென்று நிறத்தில் உணவு உண்டு பல நாட்கள் ஆனது போல் தோற்றத்தில் குழந்தையையும் காண்பவர்கள் யாவரும் ஒரே பார்வையில் கூறி விடுவார்கள் இது அவள் குழந்தை இல்லை என்று.
ஆனால் அவள், படிவம் நிரப்பும் போது அவள் குழந்தை என்று கூறியிருந்தது அவன் மனதில் நெருடலாக இருந்தது.
அவன் கேள்வியுடன் அவர் முகத்தைப் பார்க்கவும்,
கமிஷனர் என்ற விறைப்பில் இருந்து கீழே இறங்கி அவரும், அவனிடம் சகஜமாக நடந்ததைப் பற்றி சுருக்கமாக தெரிவித்தார்.
முழுவதையும் கேட்டு அறிந்தவன் மறு வார்த்தை பேசத் தோன்றாது மலைத்து நின்று விட்டான்.
அவன் பார்வையில் திலோத்தமா மிகவும் உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தாள்.
சந்திப்போம்.......
கவிபாரதீ ✍️