மார்கழி தூறலும் மனசுக்குள் மத்தாப்பும்

மார்கழி தூறலும் மனசுக்குள் மத்தாப்பும்
///////////////////////////////////////////////////////////////

நயனமுடன் நடனமாடும்
நான்கு இமைகளின் /
நடுவின் இருவிழி
நாணப் பார்வையால்/

நாணல்களை மீன்கள்
நீர்யென நினைத்து/
நீந்திடத் துடிக்கும்
நெத்திலி மீனாக /

துள்ளிக் குதித்து
தன்னிலை மறந்தேன் /
காதலை இதுவரை
காதலிக்காத இதயத்தில் /

மார்கழித் தூறலுடன்
மனசுக்குள் மத்தாப்பின் /
வண்ணமயமான உணர்வால்
வானில் பறந்தேன் /

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Aug-23, 5:47 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 69

மேலே