பறந்திடுந் தொல்லை வினைகளுமே -- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பறந்திடுந் தொல்லை வினைகளுமே

(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

(விளம் மா விளம் மா// விளம் மா காய்)

அன்புடன் பண்பும் அறிவினில் அங்கம்
----ஆகுமே வாழ்வில் உயர்ந்திடவே ;
தன்னல மில்லா தருமமும் நிற்கத்
----தரணியி லெங்கும் அமைதியாமே ;
நன்னிலம் தன்னில் நடவினைச் செய்ய
----நலமதுங் காணும் புவியதனில் ;
பன்முகத் தேவன் பரமனைப் பற்ற
----பறந்திடுந் தொல்லை வினைகளுமே ;
****

( சீர்கள் 1 3 மற்றும் 5 ல் மோனை)

(மருத்துவர் கன்னியப்பன் ஐயா அவர்கள்
வழிகாட்டல் படி இப்பதிவு)

எழுதியவர் : சக்கரை வாசன் (20-Aug-23, 6:33 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 22

மேலே