தாயுமானவன்

விழியோடு விழி கோர்த்து
விண்ணுலகம் செல்வோம் வா....

வினாடியும் விரையப் படுத்தாது
காதல்வாழ்வு வாழ்வோம் வா...

தாயாய் நான் மாறியுனை
அரவணைத் திடுவேன் அன்பே....

சேயாய் நீமிழற்றும் மொழிகேட்டு
தேன்வந்து பாயுமென் செவிதனில்....

நெஞ்சினில் நீசாய்ந்திட இயற்க்கைக்கு
மாறாய் மார்பு சுரந்திடுமோ....

கையணைப்பில் உனைநிறுத்தி முன்
நெற்றியில் இதழ்பதித்திட ஆசை....

முடிவாய் உரைத்துவிடு உன்னில்
யென் சுவடுகள் உண்டென்றால்....!!!

மூச்சுமுட்ட காதல் செய்வேன்
சேய்வந்தும் குறையாதுநம் காதல்....


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (22-Aug-23, 3:22 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 295

மேலே