மௌன விழிகள் தூது விடுகிறது
மாலைப் பொழுது
மலர்களும் விரிகிறது
வானில் நிலவும்
வருகின்ற வேளை
மலரிதழ் இரண்டும்
சிந்துது தேனை
மௌன விழிகள்
தூது விடுகிறது
மாலைப் பொழுது மலர்களும் விரிகிறது
மலரிதழ் இரண்டும் சிந்துது தேனை
வானில் நிலவும் வருகின்ற வேளை
மௌன விழிகள் தூது விடுகிறது
-----இயல்பில்
-----------------------------------------------------------------------------------------------------------------------
மலர்கள் விரியும் மாலைப் பொழுது
மலரிதழ் இரண்டும் சிந்துது தேனை
நிலவும் வானில் வருகின்ற வேளை
மலர்விழிகள் மௌன தூது விடுகிறது
மலர்கள் விரியும் மாலைப் பொழுது
மலர்போல் இதழ்கள் சிந்தும் தேனை
நிலவும் வானில் உலவும் வேளை
மலர்க்கண் மௌன தூது விடுமே
மாலைப் பொழுது மலர்களும் விரிகிறது
மலரிதழ் இரண்டும் சிந்துது தேனை
வானில் நிலவும் வருகின்ற வேளை
மௌன விழிகள் தூது விடுகிறது
மலர்கள் விரியும் மாலைப் பொழுது
மலரிதழ் இரண்டும் சிந்துது தேனை
நிலவும் வானில் வருகின்ற வேளை
மலர்விழிகள் மௌன தூது விடுகிறது
மலர்கள் விரியும் மாலைப் பொழுது
மலர்போல் இதழ்கள் மதுவைச் சிந்தும்
நிலவும் வானில் உலவும் வேளை
மலர்க்கண் விடுமே மௌனத் தூது
மலர்கள் விரிந்திடும் மாலைப் பொழுது
மலர்போல் இதழ்கள் மதுவினைச் சிந்தும்
நிலவும்காண் வானில் நடந்திடும் வேளை
மலர்விழித் தூதுமௌன மாய்
மலர்கள் விரிந்திடும் மாலைப் பொழுது
மலர்போல் இதழில் மதுவும் -- மலரே
நிலவும்காண் வானில் நடந்திடும் வேளை
மலர்விழித் தூதுமௌன மாய்
----யாப்பின் பல வடிவில்