வளர்ச்சி

பனியாக கரைந்திட - உன்தன்
பார்வை ஒன்றே போதுமே
கொஞ்சும் மொழிகேட்டு - உன்தன்,
உறைந் திடுதேயென் நெஞ்சம்

தத்திதத்தி பேசிடும் - உன்தன்
மழலையில் பெருகும் ஆனந்தம்
நித்தம் வேண்டும் - உன்தன்
தத்தித்தமிழ் பேசிடும் ஆனந்தம்

மறுத்திடுதே காலம் - உன்தன்
வளர்ச்சியில் காட்டிடுதே மாற்றம்
வார்த்தையே சட்டமாக - உன்தன்,
அறைந்திடுதே வளர்ச்சியின் மாற்றம்!!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (22-Aug-23, 3:24 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 544

மேலே