காதல் கொண்டேன்...!
கார்குழலி கண்ணசைவில் கவித்துவம் மறந்தேனோ!, இன்று
போர்தொழில் புரிந்திடவே புதுமகனாய்ப் பிறந்தேனோ...!
பெண்ணல்ல அவளொரு பெருங்கொடையாள் எமதகத்தே!, சடுதியில்
மண்ணெல்லாம் பொன்னாக்கும் மதியழகே பெரிதாமோ...!
சிற்றிடையை வட்டமிடும் சிறுவண்டாய் ஆனேனே!, என்று
பற்றிடுவாள் எம்மிடத்தே பஞ்சமுக தவமுடைத்து...?
அத்திமக் காலத்தில் ஆளாகி நின்றவளாய்!, அவள்
அதரங்கள் தொடுத்தனவே அதனடுத்த பொன்மொழிகள்...!
தனையாளும் சீமாட்டி எமையாள வந்தாளோ!, நான்
முனைப்போடு வடிப்பதற்கே இமையிரண்டால் கண்டாளோ...!
வெடித்தோடும் செங்குருதி வியர்வையாய் நனைத்திடவே!, ஒருகணம்
இடியன்றோ முழங்கியது இயல்பல்ல காதல்நிலை...!
#காதல்_கொண்டேன்