முள்கிரீடம்
உற்ற, உடன்பிறந்த
உறவுகள் வீற்றிருக்கும்
இதய சிம்மாசனத்தில்
பொக்கிஷமாக நம்முள்....
சில ஊவாவுறவுகள்
மனிதவுரு கொண்ட
மிருகம், மறுக்கயியலா
மதயானை, மாண்புமிகு
ஸ்தானத்தில் மதர்த்து
நிற்குமது நீமனதுள்
மறுகினும் உன்சிரசில்
ஏறிநிற்கும் முள்கிரீடமாக.....
கவிபாரதீ ✍️