கண் தானம்

கண் தானம்

வாழ்க்கையில் எப்பொழுதும் தேவை நிதானம்

நகைச்சுவை திரைத்துறைக்கு கொடுத்த தானம் சந்தானம்

கணித ஆசிரியர் கொடுக்கும் தானம் எண் தானம்

பாட்டு ஆசிரியர் கொடுக்கும் தானம் பண் தானம்

திருமணத்தில் பெற்றோர்கள் கொடுக்கும் தானம் பெண் தானம்

புலவனுக்கு வேந்தன் கொடுக்கும் தானம் பொன் தானம்

தன் வாரிசுக்கு தந்தை கொடுக்கும் தானம் மண் தானம்

வனஜா அம்மா மக்கள் அனைவரையும் செய்யச் சொல்வது கண்தானம்

தானம் செய்யாத கண்கள் மண்ணில் மக்கி போகிறது

தானம் செய்யும் போது உங்கள் மனதை எண்ணி கண்கள் மகிழ்ச்சியில் சொக்கிப் போகிறது

இறந்த பிறகு
இறந்து போகும் கண்களை பிறருக்கு இரந்து கொடுங்கள்

தீயில் எரிந்து போகும் கண்களை பிறருக்கு
எரிந்து கொடுங்கள்

அழிவை தெரிந்து போகும் பார்வையை பிறருக்கு அழகை தெரிந்து கொள்ளக் கொடுங்கள்

தகனம் செய்யும் விழிகளை
பிறருக்கு தானம் செய்யுங்கள்


நீங்கள் தானம் செய்யும் விழிகள்
விழிகள் அல்ல
கடவுளை அடையும் வழிகள்

கேரளத்தின் திருவிழா ஓணம்
பிறருக்கு உதவியே நம் புகழ் எட்ட வேண்டும் வானம்
இறைவா அனைவருக்கும் கொடு ஒரு ஞானம்
அது என்னவென்றால் அனைவரும் கொடுக்க வேண்டும் கண்தானம்..

எழுதியவர் : Kumar (3-Sep-23, 1:48 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kan thaanam
பார்வை : 51

மேலே