நீதானே அந்தக் குயில்

நீதானே அந்தக் குயில்
%%%%%%%%%%%%%%%

தூரல் விழும் காலை வேளையிலே
துள்ளி நனைந்தே குயிலென/ பாடுபவளே/
துண்டு கொண்டு வந்திடவா தலை/
துவட்டி காதல் மழையில் நான்நனைய/

இடைமடிப்பு நின்ற மழைத்துளி மின்னியே/
இகழ்ச்சியோடு எனைப் பார்த்து புன்னகைக்க/
இதழோடு முத்தம் பதித்த நீர்துளி/
இன்முகம் மறைத்தே இதமாக வடிந்திட/

முகில்கிழித்த நிலவாக முகம் காண்டேன்/
மனந்திருடிய அந்தக் குயில் நீயென/

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (10-Sep-23, 5:23 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 93

மேலே