வீட்டுக்கொரு மருமகள்

என்னங்க, நான் ஒரு கனவு கண்டேன். அதிலிருந்து ஒரே அதிர்ச்சியா இருக்குதுங்க.
@@@@
என்ன கனவுன்னு சொல்லு தங்கம்.
@@@@@@@
கனவிலே ஒரு ஊர்வலம் போகுது. அந்த ஊர்வலத்தில் சுமார் ஆயிரம் பேர் இருப்பாங்க. கையிலே ஆளுக்கொரு பதாகையைத் தூக்கிப் பிடிச்சு போறாங்க. அதிலே "வீட்டுக்கொரு மருமகள் நாட்டுக்கு நல்லது"னு சொல்லிட்டே போறாங்க. அந்தக் கனவு கண்டதிருந்து நம்ம பையன்களை நெனைச்சு ஒரே கவலையா இருக்குதுங்க.
@@@@@@
அந்தக் கனவுக்கு நம்ம பையன்களுக்கும் என்ன சம்பந்தம்?
@@@@@@@
நாட்டில பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கொறஞ்சிட்டே வருது செய்தில சொல்லறாங்க. நாம அஞ்சு பையன்களைப் பெத்து வச்சிருக்கோம். இரண்டு இரட்டைப் பிறவிகள். மூத்தவங்க இரண்டு பேரும் ஒன்னாம் வகுப்பு படிக்கிறாங்க. இளைய இரட்டையர்கள் மழலையர் பள்ளிக்குப் போறங்க. கடைசிப் பையனுக்கு ஒரு வயசு ஆகுது. இவுங்கள நெனச்சுக் கவலையா இருக்குதுங்க.
@@@@@@
க்வலைப்பட என்ன இருக்குது?
@@@@@@@@@
எதிர்காலத்தில் மணப்பெண்கள் பற்றாக் குறை வந்தா "வீட்டுக்கு ஒரு மருமகள் திட்டம்"னு அறிவிச்சிட்டாங்களா நம்ம பையன்கள் திருமண வாழ்க்கை என்ன ஆகும்?
@@@@@@@
அது மாதிரியெல்லாம் நடக்காது தங்கம். கவலைப்பட வேண்டாம்.
@@@@@@
நடந்தா என்ன செய்யறதுங்க?
@@@@@@@
பாண்டவர் கதை மாதிரி தான். அஞ்சு மருமகள்கள் இருந்தா ஒரே சண்டை சச்சரவா இருக்கும். ஒரே மருமகள் இருந்தா வீட்டில பிரச்சனை இல்லாம இருக்கும்.
@@@@@@@
அது சரிங்க. மருமகளுக்கு பிறக்கிற குழந்தைகளை பள்ளியில சேர்க்கிற போது தந்தை பேரக் கேட்டா என்ன சொல்லறதுங்க?
@@@@@@@
சில மாநிலங்கள்ல ஒருத்தரு பேருக்கு முன்னாடி குடும்பப் பேரைத் தான் வச்சுக்குவாங்க. அது மாதிரி எங்க தாத்தா பேரைக் குடும்பப் பேரா வச்சுக்கலாம். குடும்பச் சொத்து மருமகள் பேரிலே இருக்கும்.
@@@@@@@@@@@@@
என்னங்க இதெல்லாம் நடக்கிற கதையா? எந்தக் குழந்தைக்கு யார் தந்தைனு முடிவு செய்யறது?
@@@@@@@
டி என் ஏ சோதனை பண்ணித் தெரிஞ்சுக்க வேண்டியதுதான்.
@@@@@@
குடும்பத்தில் ஒரே மருமகள் இருந்தா வீட்டில் சண்டை சச்சரவு இருக்காதுனு சொன்னீங்க. பையன்களுக்குள்ள அடிதடி சண்டை சச்சரவு, கை கலப்பு வந்தா என்ன செய்யறதுங்க?
@@@@@@@
அந்த மாதிரி நடக்காம பாத்துக்கறது மருமகளோட சாமர்த்தியம்.
@@@@@@@@@@
இருந்தாலும் எனக்கு பயமா இருக்குதுங்க.
@@@@@@@@@@@
நீ "வீட்டுக்கொரு மருமகள்" கனவு கண்டா அது நெசமா நடக்குமா?
நாம் இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்ந்துட்டு இருக்கிறோம்.
அது மாதிரி நடக்க வாய்ப்பிள்ளை. கவலைப்படாத தங்கம்.
@@@@@@
நீங்க சொல்லறது கொஞ்சம் ஆறுதலா இருக்குதுங்க.

எழுதியவர் : மலர் (10-Sep-23, 8:53 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 151

மேலே