இளம்பிறை எங்கே
இளம்பிறை எங்கே?
@@@@@
யாரைத் தம்பி கேட்கிறாய்?
@@@@@
இளம்பிறையைத் தான்.
@@@@@
மாலை ஆறு மணிக்கு மேல் வானத்தில் வரும். அப்பப் பாரு இளம்பிறை தெரியும்.
@@@@@
என்னங்க அண்ணாச்சி விளையாடறீங்களா? இளம்பிறை பகலில் வராதா? வீட்டில் இளம்பிறையை ஒளிச்சு வச்சிருக்கிறீங்களா?
@@@@@@@
வானம் எங்கள் வீடு அல்ல. இளம்பிறையை ஒளிச்சு வைக்க.
@@@@@@
இளம்பிறைக்கும் உங்களுக்கும் தொடர்பே இல்லையா?
@@@@@@
என்ன கேள்வி தம்பி? இளம்பிறை உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். அனைவருக்கும் சொந்தம்.
@@@@@@
நான் சொல்லற இளம்பிறை உங்க வீட்டுச் சிறுமி.
@@@@@@@@
வானத்தில் இருக்கிற இளம்பிறை எப்படி சிறுமி - எங்கள் வீட்டுச் சிறுமி ஆகும்?
@@@@@@@
அண்ணாச்சி, உங்களுக்கு பெண் குழந்தையே இல்லையா?
@@@@###
நாங்கள் தவமிருந்து பெற்ற குழந்தை, பெண் குழந்தை 'பிரமல்'.
@@@@@@@
'பிரமல்' இந்திப் பேரு. அந்தப் பேருக்கு பொருள் (அர்த்தம்) என்னன்னு தெரியுமா?
@@#@####
தம்பி, பெத்த பிள்ளைகளுக்கு இந்திப் பேரை வைக்கிறவங்க தான் உண்மையான பச்சைத் தமிழர்கள். இந்திப் பேருன்னாவே இனிமையான பேரு. அதுக்கு போயி எதுக்குப் பொருள் தெரியணும்.
@@@##
அண்ணாச்சி, இந்தில 'பிரமல்'னா தமிழில் 'இளம்பிறை'னு பொருள்.
@@@@@@@@@
அடடா அருமையான தமிழ்ப் பேரு. இது தெரியாம போச்சே. நாளைக்கே வழக்குரைஞரைப் பார்த்து 'பிரமல்'ங்கிற பேரை 'இளம்பிறை'னு மாத்தறேன். நாலு பேரு அந்தப் பேரைக் கேவலமாகப் பேசினாலும் பரவாயில்லை.
@@@@@@@@
நல்லதுங்க அண்ணாச்சி. வாழ்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@#
Piramal = Young crescent 🌙. Unisex name
***************************************************
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்