முதல்வன்
முதல்வன்
வென்பாக்கள்
முதல்வரின் வேலை முதலில் தமிழர்
அதனைசெய்யா சாடி அலைவன் -- எதனை
முதல்வருள்ள நாடுகள் முப்பதின் முக்ய
முதல்வரை சாடாதே மூடு
முப்பது நாட்டினுடை முக்கிய மந்திரியைத்
தப்பெனச் சொல்லும் தறுதலை -- தப்பாது
தப்புத்தப் பாய்வுளறி தம்மானம் காற்றிலே
தப்பாப் பறக்கவிடுந் தான்
பிரதமரின் கண்காணி பின்(னா)ஆள் இவனோ
தரமாய் தமிழரை ஆள -- தரவே
கரவுநெஞ்சன் இஃதே கயவுக் குடும்பம்
நரம்பிலா பேசிடும் நாக்கு
பிரதமரின் கண்காணி பின்(னா)ஆள் இவனோ
தரமாய் தமிழரை ஆள -- தரவே
கரவுநெஞ்சன் இஃதே கயவுக் குடும்பம்
நரம்பிலா பேசிடும் நாக்கு
நாட்டை கவனியான் நாட்டின் பிரதமரை
சாடிச் சதிசெய்யும் சாது
......