காந்திஜியை நினைப்போம்

காந்திஜியை நினைப்போம்

வந்தேமாதரம் எனக்கூவியவர்களை கண்டித்து
வன்முறையால் தண்டித்து வலிமையைக் காட்டி
வஞ்சனையால் நாட்டைப் பிரித்து ஆண்டு
வாழும் மக்களுக்கு இன்னல் விளைவித்து
வரிசுமையால் வருந்திட செய்து அடிமையாக்கி
வறுமையில் வாடும் மக்களை உய்விக்க வந்த மகான்
வட்ட வட்ட கண்ணாடியில் வலிமையுள்ள கண்களுடன்
வெள்ளையனே வெளியேறு எனக் கோஷமிட்டு வீதியில்
மனவலிமையால் மக்களை ஒன்று சேர்த்து திரண்டு வந்து
இரத்தமில்லாமல் அடக்கத்தோடு அகிம்சையைக் கடைபிடித்து
சுதந்திரம் வாங்கித்தந்த அண்ணல் காந்தியை போற்றிட
அவர் பிறந்த இந்த நன்னாளில் அவரை வணங்கி கொண்டாடுவோம்

எழுதியவர் : கே என் ராம் (1-Oct-23, 4:19 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 51

மேலே