கன்னா பின்னாவென் றெழுதாக் கொள்கை நன்றா மென்பேன் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
என்னவோ ஏதோ வென்று
..ஏதேதோ ஒன்றைக் கன்னா
பின்னாவென் றெழுதாக் கொள்கை
..பெரிதுமே நன்றா மென்பேன்!
என்றும்,நல் லுரையைக் கூறும்
..எழுத்தினில் அமைத்தல் நன்றாம்
என்றும்,நி லைக்கும் இந்த
..எழுத்தில்தாம் கவிதை நன்றாம்!
- வ.க.கன்னியப்பன்

