எதுகை மோனை சேர்ந்திருக்க யெழிலாய்க் கவிதை - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)

எதுகை மோனை சேர்ந்திருக்க
..யெழிலாய்க் கவிதை படைத்திடலாம்;
புதுமை பலவுங் கொண்டங்கே
..புணர்ச்சி விதிகள் நலந்தருமே!
துதிக்கும் பாக்க ளெல்லாமுந்
..தொடர்ந்தே யின்பச் சுவைதருமே;
அதுவே யெனக்க சுரபலமு
..மடுக்க டுக்காய்த் தந்திடுமே!

– வ.க.கன்னியப்பன்

சீர் ஒழுங்குடன், தகுந்த எதுகையும், மோனையும் சேர்ந்து,சிறந்த கருத்துமிருந்தால் பாடல் சிறக்கும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Oct-23, 6:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 71

புதிய படைப்புகள்

மேலே