விழிப்பு
தூங்கி எழுந்த உடனே கடவுள் முகத்திலே விழிப்பதே பழக்கமாக கொண்டிருந்தார் கைலாஷ்.அவள் மனைவி இன்றாது நமக்கு நல்ல விடிவு காலம் வந்துடா நல்லா இருக்கும் என்றாள் கமலா..
தள்ளு வண்டியில் வரும் வருமானம்
மாத கடைசி வரை வர மாட்டேன் இருக்கு.
இருவருக்கும் செல்ல பிள்ளை வெண்ணிலா..கல்யான வயதில்
படித்து விட்டு வீட்டிலே பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கிறாள்.
நாட்கள் நகர தொடங்கியது வருமானம் இல்லைனாலும் பொண்ணுக்கு கல்யானம் பண்ணி பார்க்கனும் என இருவரும் உழைக்க ஆரம்பிச்சாங்க.காலை மாலைனு வண்டி கடையும் மதியம் வீட்டு வேலை,தோட்ட வேலைனு குருவி சேமிக்கற மாதிரி பணத்தை சேமிக்க தொடங்கினாங்க.
மாப்பிளை பார்க்கவும் ஆரம்பிச்சாங்க நல்ல வரன் வந்தது
திருமண வேலைகள் மிகவும் வேகமாக நடந்தது.கைலாஷ்,கமலா நினைத்த மாதிரி திருமணம் முடிந்தது.அருமையான வாழ்க்கை வெண்ணிலாவுக்கு குழந்தையும் பிறந்தது.மனதிருப்தியுடன் இருந்தனர்.தீடிரென ஒருநாள் கைலாஷ்க்கு உடல் நிலை சரி இல்லாமல் போக மருத்துவரிடம் கமலா அழைத்து சென்றாள்.
கைலாஷ் சிறிது காலமே இருப்பார்.அவரின் உடலை சரி செய்ய முடியாது என்றனர்.
நாட்கள் கழிந்தது.கைலாஷ் உயிர் பிரிந்தது.வெண்ணிலா தன் அப்பாவோடு இருந்த நாட்களை நினைத்து நினைத்து கதறி அழுத்தாள்.இறுதி சடங்கு நிறைவேற
கமலா தனியாக நின்றதை பார்த்து என்ன செய்வது எனயோசித்தால் வெண்ணிலா.உடனே அவள் கணவர்
அம்மாவை அழைத்து வா நம்மோடு இருக்கட்டும் என்றான்.
அந்த நொடிபொழுது கணவனை நினைத்து வெண்ணிலா கண்கள் கலங்கி நின்றாள்.
உறவுகளை சேர்ப்பது கடினம்
நல்ல உறவுகளை இழந்து விடாதீர்கள்
பணம்,புகழ்,சம்பாதித்து விடலாம்.இழந்த உறவுகள் வாழ்வில் என்றுமே கிடைக்காது,பிறர் பேசுவதை கண்டு அஞ்சி அஞ்சி
வாழாதீர்கள்....உனக்கென வாழ பழகுங்கள்..மகிழ்ச்சியாய் சுய சிந்தனையோடு ....